முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்! ஜெயலலிதா மர்ம சாவில் உண்மை கண்டுபிடிக்க படும் என உறுதி!

 ஷ்யாம் நியூஸ்

25.03.2021

தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்! 
ஜெயலலிதா மர்ம சாவில் உண்மை கண்டுபிடிக்க படும் என உறுதி! 




தூத்துக்குடியில் தி.மு.க வேட்பாளர் கீதாஜீவனை ஆதரித்து, மாநில இளைஞரணிச் செயலாளா் உதயநிதி ஸ்டாலின் இன்று பிரசாரம் செய்தார். விவிடி மெயின் ரோடு, டூவிபுரம் 5-வதுதெரு – அண்ணா நகா் உள்ளிட்ட பகுதிகளில் பகுதியில் வாக்குசேகரித்த அவர் பொதுமக்கள் மத்தியில் பேசுகையில், "கொளுத்தும் வெயிலில் நிற்கும் நீங்கள் உங்கள் சின்னம் உதயசூரியன் என்று முடிவு செய்து விட்டீர்கள். இந்த முறை திமுக ஆட்சி அமைவது உறுதி. கடந்த தேர்தலில் 22ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் கீதாஜீவனை வெற்றி பெறச் செய்தீர்கள். 

இந்த முறை ஒரு லட்சம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் 40 இடங்களில் 39 இடங்களை வெற்றிபெறச் செய்து இந்தியாவின் 3வது பெரிய கட்சியாக ஆக்கினீர்கள். ஒட்டுமொத்த இந்தியாவே தூங்கிக் கொண்டிருந்தபோது 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். சொந்த பணத்தை எடுப்பதற்காக ஏடிஎம் வரிசையில காத்திருந்து ஆயிரக்கணக்கான மக்கள் இறந்துவிட்டனர். இந்த தேர்தலில் மோடியையும், எடப்பாடி பழனிசாமியையும் செல்லாக் காசாக்க வேண்டும். 
மதுரையில் 75 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமணை கட்டியதாக சொன்னார்கள் நான் அங்கு சென்று பார்த்தபோது இந்த செங்கள் மட்டும்தான் இருந்தது அதை  கையோடு எடுத்துட்டு வந்துவிட்டேன் உங்களிடம் காண்பிக்க என்றார். மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதா சாவில் மர்மம் உள்ளது. அதை கண்டுபிடித்து அதற்க்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றார். மற்றும் நீட் தேர்வால் நாம் பல பிள்ளைகளை இழந்துவிட்டோம் திமுக ஆட்சி வந்த உடன் நீட் தேர்வு தடை செய்யப்படும் என்றார் .
 ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் 13பேரை சுட்டு கொன்றுவிட்டு, டிவி பார்த்துதான் தெரிந்துகொண்டேன் என்ற முதல்வருக்கு மே 2ம் தேதி தன் பதவி போனதையும் டிவி பார்த்தே தெரிந்துகொள்ள செய்யுங்கள். ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என போராடியவர் 71பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது அதில் ஒரு போலிஸ்  மீது கூட வழக்கு பதிய வில்லை.திமுக ஆட்சி வந்தவுடன் 71 பேர் மீதும் உள்ள வழக்குகள் திரும்பபெறப்படும் என்றார். திமுக ஆட்சிக்கு வந்தால், தூத்துக்குடி திரேஸ்புரத்தில் தூண்டில் பாலம், விவிடி சிக்னல் பகுதியில் மேம்பாலம் போன்ற திட்டங்கள் நிறைவேற்றப்படும். நான் பிரசாரம் செய்யு்ம்போது என்மீது போலீசார் வழக்கு போடுகிறார்கள். நான் கலைஞரின் பேரன்,எந்த வழக்கிற்கும் அஞ்சமாட்டேன் என்றார். பிரசாரத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனகலந்து கொண்டனடனர்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...