முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிப்ரவரி, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தமிழகத்தில் பிஜேபி ஆதரவுடன் பிஜேபிக்கு எதிரான முடிவெடுக்க தயாராகிறதா அதிமுக !குடியுரிமை சட்டத்தை ஏதிர்க்க முடிவு

ஷ்யாம் நியூஸ் 27.02.2020 தமிழகத்தில் பிஜேபி ஆதரவுடன் பிஜேபிக்கு எதிரான முடிவெடுக்க தயாராகிறதா அதிமுக !குடியுரிமை சட்டத்தை எதிர்க்க முடிவு !  கடந்த மாதம் குடியுரிமை சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது .இதனால் நாட்டில் பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது .மற்றும் பலமாநிலங்களில் இந்த சட்டத்தை அமல் படுத்த மாட்டோம் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளன .குடியுரிமை சட்டம் நிறைவேற அதிமுக கூட்டணி எம் பி கள் ஆதரவாக வாக்களித்தனர் இந்த நிலையில் தமிழக முதலவர் குடியுரிமை சட்டத்தால் தமிழக மக்களுக்கு பாதிப்பு இல்லை என்று கூறியிருந்தார் . தமிழகத்தில் அணைத்து மாவட்டத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்த்து போராட்டம் நடைபெற்று வருகிறது இது ஆளும் அதிமுக அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என தெரிகிறது .மற்றும் சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில் விரைவில் வரவிருப்பதால் அதிமுக வாக்குகள் பிரிய வாய்ப்பு உள்ளது என அதிமுக பிரமுகர்கள் கருதுகின்றனர் .ஆகவே இனி வரும் காலங்களில் பிஜேபி யுடன் உள்ள தொடர்பை நிறுத்தி கொள்ள அதிமுக  தயாராகிறது .முதலில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நி...

தமிழ் ஆட்சிமொழி சட்டவாரம் நிகழ்ச்சியில் அமைச்சருக்கு ஆங்கிலத்தில் வரவேற்பு கொடுத்த தூத்துக்குடி அரசு பள்ளி !

ஷ்யாம் நியூஸ் 27.02.2020 தமிழ் ஆட்சிமொழி சட்டவாரம் நிகழ்ச்சியில் அமைச்சருக்கு ஆங்கிலத்தில் வரவேற்பு கொடுத்த தூத்துக்குடி அரசு பள்ளி ! தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி சிவந்தாக்குளம் மாநகராட்சி பள்ளியில் தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் பள்ளி குழந்தைகளை அழைத்து வர  15 லட்சம் மதிப்பிலான பேருந்து வழங்கப்பட்டது .மற்றும் தமிழ் ஆட்சிமொழி சட்டவாராம் விழிப்புணர்வு நிழச்சியும் நடைபெற்றது .நிகழ்ச்சியில் பள்ளி வாகனத்தை அமைச்சர் கடம்பூர் ராஜு கொடி அசைத்து தொடக்கி வைத்தார் பின்பு தமிழ் ஆட்சிமொழி சட்டவாரம் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார் .10 மணிக்கு வரவேண்டிய அமைச்சர் 11 மணியளவில் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்தார் தமிழ் ஆட்சிமொழி சட்டவாரம் நிகழ்ச்சில் அமைச்சருக்கு ஆங்கிலத்தில் வரவேற்பு கொடுத்தனர் .அமைச்சர் வர காலதாமதம் ஆனதால் மாவட்ட ஆட்சித்தலைவரும் மாநகர ஆணையரும் நீண்டநேரம் காத்திருந்தனர் .

சுவரில் மோதிக்கொண்ட நிர்பயா குற்றவாளி; தூக்குத் தண்டனையைத் தள்ளிப்போட முயற்சி?

ஷ்யாம் நியூஸ்  20.02.2020 சுவரில் மோதிக்கொண்ட நிர்பயா குற்றவாளி; தூக்குத் தண்டனையைத் தள்ளிப்போட முயற்சி? நிர்பயா குற்றவாளிகளில் ஒருவரான வினய் ஷர்மா, தூக்குத் தண்டனையைத் தாமதப்படுத்த தனக்குத் தானே சுவரில் மோதிக்கொண்டு காயத்தை ஏற்படுத்தியுள்ளார்.   டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா கொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேரையும் கடந்த 1ம் தேதி தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் குற்றவாளிகள் தரப்பில் நீதிமன்றத்தில் புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதால், தண்டனையை நிறைவேற்றுவதில் சட்டரீதியான தடை உருவானது.  இந்நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான வினய் ஷர்மா, தனது தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கக் கோரி குடியரசுத்தலைவருக்குக் கருணை மனு அனுப்பினார். அதனைக் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார். இதை எதிர்த்து வினய் ஷர்மா, தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்த...

தூத்துகுடியில் தூங்குவது மாநகராட்சி மட்டும் அல்ல ஊழியரும்தான் !

ஷ்யாம் நீயூஸ் 20.02.2020 தூத்துகுடியில் தூங்குவது மாநகராட்சி மட்டும் அல்ல ஊழியரும்தான் ! தூத்துகுடியில் கடந்த மழைக்காலங்களில் பெய்த மழையில் தூத்துக்குடியில் உள்ள அணைத்து சாலைகளும் பழுது ஆனது அப்போது தேங்கிய மழைநீர் இன்னமும் வடியாமல் சாக்கடையாக தேங்கி உள்ளது ,நகரின் மைய பகுதியில் மட்டும் ஓரளவிற்கு மழைநீரை வெளியேற்றிய மாநகராட்சி அதன் சுற்று வட்டார பகுதிகளில் இன்னமும் சாக்கடைகள் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்திவருகிறது .தூத்துக்குடி சுமார்ட் சிட்டி திட்டத்திற்கு இதுவரை 930 செலவு செய்து இருப்பதாகவும் அடுத்து 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்க ரூபாய் 100 கோடி நிதிகேட்கப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி ஆணையர் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்த இருந்தார் .ஆனால் தூத்துக்குடி மைய பகுதிகளில் உள்ள தெற்கு காவல்நிலத்தில் இருந்து காமராஜ் கல்லூரி செல்லும் சாலை மிகவும் மோசமாக உள்ளது 24 ,மணிநேரமும் அந்த சாலை தூசி பறக்கிறது. இதனால்  அந்த சாலை பகுதில் உள்ள குடியிருப்பு வாசியால் சுவாசிக்க முடியல திணறி வருகின்றனர் . மற்றும் புதுகிராமம் சாலை நடுவில் உள்ள சாக்கடை தொட்டிக்கு 500...

தூத்துக்குடியில் அடையல் ராஜரத்தினம் முதலாம் ஆண்டு நினைவு தினம்! நேசகரங்கள் முதியோர் மற்றும் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கினர் !

ஷ்யாம் நியூஸ்  19.02.2020 தூத்துக்குடியில் அடையல் ராஜரத்தினம்  முதலாம் ஆண்டு நினைவு தினம்! நேசகரங்கள் முதியோர் மற்றும் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கினர் ! அடையல் ராஜரத்தினம் அறக்கட்டளை சார்பாக தூத்துக்குடி கால்டுவெல் காலனியில் உள்ள நேசகரங்கள் முதியோர் மற்றும் குழந்தைகளுக்கு மதிய உணவை ஆதிதிராவிட மக்கள் முன்னேற்ற கழகம் நிறுவனர் ஸ்டீபன். என்.செந்தமிழ் பாண்டியன் வழங்கினார், இந்நிகழ்ச்சியில் திமுக மாவட்ட இளைஞர் அணி சுரேஷ்குமார், திமுக பிரமுகர் மாரியப்பன், செல்வகுமார், 49வது காங்கிரஸ் தலைவர் மனுவேல், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் சோலைராஜ், ரவிக்குமார், மற்றும் கருப்பசாமி, தனபால், துரைபாண்டியன், மாரிமுத்து, பிரின்ஸ், சித்திரை குமார், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடியில் படகுதளம் தூர்வார பைபர் நாட்டு படகு மீனவர் சங்கம் ஆட்சியரிடம்கோரிக்கை !

ஷ்யாம் நியூஸ் 18.02.2020 தூத்துக்குடியில்  படகுதளம் தூர்வார பைபர் நாட்டு படகு மீனவர் சங்கம்  ஆட்சியரிடம்கோரிக்கை ! தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதிகளில் உள்ள மீனவர்கள் கடலில் மீன்பிடித்துவிட்டு கரை திரும்பும்போது இறங்கு தளத்தில் படகுகள் தரை தட்டுகிறது  படகின் முன் பகுதி இறங்குதளத்தில் இடித்து சேதம் அடைகிறது ஆகவே  அந்த பகுதியை ஆழப்படுத்தி தரவேண்டும் என்றும்  அந்த பகுதியில் T .பாலம்  இரண்டு கடித்தவேண்டும் என்றும் மேலும் அந்த பகுதியில் பக்கில் ஓடை உள்ளது அதில் உள்ள கழிவு நீர் கடலில் கலக்காமல் தேங்கி உள்ளது எனவே அந்த பகுதியில் தூர்வாரி தரவேண்டும்  என்றும் தூத்துக்குடி  மாவட்ட சிந்தாயாத்திரைமாதா  பைபர் நாட்டு படகு மீனவர் கானகத்தை சார்ந்த தலைவர் கே .ஆல்ரின் ,துணை தலைவர் சத்யராஜ் செயலாளர் ஏவுலின் போன்றோர் தலைமையில் தூத்துக்குடி ஆட்சியரிடம் மனு கொடுத்தனர் .

சுற்றுசூழல் மாசுபாட்டை தடுக்க தூத்துக்குடி அ தி மு க மாவட்ட கவுண்சிலர் ஆட்சியரிடம் வேண்டுகோள் !

ஷ்யாம் நீயூஸ் 18.02.2020 சுற்றுசூழல் மாசுபாட்டை தடுக்க தூத்துக்குடி மாவட்ட அ தி மு க மாவட்ட கவுண்சிலர் ஆட்சியரிடம் வேண்டுகோள் ! தூத்துக்குடி மாவட்ட 11 வது  வார்டு உறுப்பினர் பாலசரஸ்வதி நயினார் .இவர்  தனது மாவட்ட ஊராட்சிக்கு உட்பட்ட வடக்கு காசேரி கிராம ஊராட்சியில் ஜெனீபா இந்தியா என்ற தனியார் மீன் பவுடர் .மீன் எண்ணெய் தயாரிக்கும் நிறுவனம் அப்பகுதியில் சுற்றுசூழல் மாசுபாட்டை செய்துவருகிறது . இந்த ஆலை அழுகிய மீன்களை பதப்படுத்தி மீன் எண்ணெய் ,மீன் பவுடர் தயாரிக்கும்பொது துர்நாற்றம் வீசுகிறது  அது காற்றின் திசைக்கு ஏற்ப சுழன்று வீசுவதால் அருகில் இருக்கும் கிராம மக்களால் சுவாசிக்க முடியவில்லை. .அருகில் உள்ள கிராமங்களில்  1000 க்கும் மேற்பட்ட பாமரமக்கள்,  முதியோர்கள் ,பச்சிளம் குழந்தைகள் போன்றோர்கள் சுவாச பிரச்சனையால் அவதிப்படுகின்றனர் மேலும் ஆஸ்துமா போன்ற கோளாறுகள் உள்ளவர்கள்  பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் .மேலும் ஆலையில் இருந்து வெளிவரும் மீன் கழிவு  நீர்  சுற்றிலும் உள்ள மானாவாரி விவசாய நிலங்களில் கலப்பதால் மண்ணின் தன்மை குறைந...

தூத்துக்குடியில் காவல்நிலையம் முற்றுகை !டி எஸ் பி பிரகாஷ் சாமர்த்தியத்தால் மாவட்ட எஸ் பி அலுவலகம் தப்பியது !

SHYAM NEWS   16.02.2020 தூத்துக்குடியில் காவல்நிலையம்  முற்றுகை !டி எஸ் பி பிரகாஷ் சாமர்த்தியத்தால் மாவட்ட எஸ் பி அலுவலகம்  தப்பியது ! சி ஏ ஏ ,என் ஆர் சி க்கு எதிராக நாடுமுழுவதும்பொதுமக்கள் ,அரசியல் கட்சிகள் மூலம்  போராட்டம் நடைபெற்று வருகிறது .இதன் தொடர்ச்சியாக  நேற்றைய முன்தினம் சென்னை வண்ணாரப்பேட்டையில் நடந்த போராட்டத்தில் காவல்த்துறை தடியடி நடத்தியதை கண்டித்து தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் காவல்நிலையம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது . தூத்துக்குடியில் நேற்று (15.02.2020) காலை 11 மணி அளவில்  சி ஏ ஏ ,என் ஆர் சி எதிராக போராடிய  பொதுமக்களை   காவல்த்துறை தடியடி நடத்தியதை கண்டித்து  தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பளார் அலுவலகத்தை முற்றுகையிட போராட்டக்காரர்கள் நினைத்தனர் . ஆனால் அதை முன்கூட்டியே அறிந்த தூத்துக்குடி டி எஸ் பி பிரகாஷ் போராட்ட தலைவர்களை அழைத்து பேசி மாவட்ட கண்காணிப்பளார் அலுவலகத்தை முற்றுகை போராட்டத்தை கைவிட செய்தார் .பின்னர் தூத்துக்குடியில் தெற்கு காவல்நிலையம் முன்பு முற்ற...

தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூபாய் 48 லட்சம் மதிப்பில் சேவை மையம் கட்டிட பூமி பூஜை -ஆட்சியர் தொடக்கி வைத்தார் .

SHYAM NEWS 14.02.2020 தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூபாய் 48 லட்சம் மதிப்பில் சேவை மையம் கட்டிட பூமி பூஜை -ஆட்சியர் தொடக்கி வைத்தார் . தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ஒருங்கிணைந்த சேவை மையம் கட்டிடம் கட்ட ரூபாய் 48 லட்சம் மதிப்பில் திட்டமிடப்பட்டது  அதன்படி இன்று (14.02.2020) அக்கட்டிடத்திற்கு பூமிபூஜை நடைபெற்றது . தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி முதல் செங்கல் எடுத்து வைத்து ஆரம்பித்து வைத்தார் .இதில் மருத்துவர் அறை ,சமையல் அறை ,5 படுக்கைகொண்ட சிறப்பு பிரிவு ,மற்றும் மனநிலை சம்பந்தமாக அறிவுரை வழங்கும் அறை ,பணியாளர்கள் அறை ,பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் சேவை மையம் ஆகியவை  இதன் சிறப்பு அம்சம் ஆகும் .இதில் அரசு மருத்துவமனை டீன் (பொ ) மருத்துவர் பாவலன் ,உதவி உறைவிட மருத்துவர் ஜெயபாண்டி ,மாவட்ட சிறப்பு பொது நலன்  அதிகாரி தனலெட்சுமி ஒருங்கிணைந்த சேவை மைய  நிர்வாகி ஷெலின் ,உதவி பொறியாளர்கள்  வெள்ளைச்சாமி ராஜ் , அன்புராஜ் ஆகியோர் உடன் இருந்தனர் .

ஏதோ கரண்ட் ஷாக்குன்னு சொன்னீங்களே.. எப்படி இருக்கு அமித் ஷா ஜி? போஸ்டர் ஒட்டி கலாய்க்கும் ஆம் ஆத்மி

SHYAM NEWS 11.02.2020 ஏதோ கரண்ட் ஷாக்குன்னு சொன்னீங்களே.. எப்படி இருக்கு அமித் ஷா ஜி? போஸ்டர் ஒட்டி கலாய்க்கும் ஆம் ஆத்மி   டெல்லி: இதில் கரண்ட் உள்ளது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா, போட்டோ மீது எழுதி போஸ்டர் அடித்து ஒட்டி கலாய்த்து வருகிறார்கள் ஆம் ஆத்மி தொண்டர்கள். டெல்லி சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் ஒரு மகத்தான வெற்றியை நோக்கி ஆம் ஆத்மி கட்சி பயணித்துக்கொண்டு உள்ளது. இதையடுத்து டெல்லி ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில், ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்கள் ஹோலியைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். ஏனெனில் டெல்லியில், ஷாஹீன் பாக் ஒரு தேர்தல் பிரச்சினையாக பாஜகவால் மாற்றப்பட்டது, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் ஆம் ஆத்மி கட்சியைத் தாக்கிபேசினார். ஒரு கூட்டத்தில் அமித் ஷா, 'டெல்லியின் ஈ.வி.எம்களின் பொத்தானை மிகவும் சத்தமாக அழுத்தவும். ஷாஹீன் பாக்கில் மின்சாரம் தாக்கினால் எப்படி அதிருமோ அப்படி அதிர வேண்டும் என அமித் ஷா பேசினார். அமித் ஷா முதல் கபில் மிஸ்ரா, பர்வேஷ் வர்மா உள்ளிட்ட ஒவ்வொரு பாஜக தலைவரும் ஷாஹீன் பாக் போராட்டத்திற்கு ஆம் ஆத்மி கட்சி நிதியுதவி அளித்தது என்று குற்றம்...

தூத்துக்குடிக்கு மாநிலஅளவிலான நீச்சல் போட்டியில் இரண்டு முதலிடம் பெற்று தந்த பள்ளி மாணவன் !

  SHYAM NEWS 10.02.2020 தூத்துக்குடிக்கு மாநிலஅளவிலான  நீச்சல் போட்டியில் இரண்டு முதலிடம் பெற்று தந்த   பள்ளி மாணவன்  ! மாநிலஅளவிலான நீச்சல் போட்டியில் குரூப் 4 அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டம் பி.எம்.சி பள்ளியை சார்ந்த 6ம் வகுப்பு மாணவன் எஸ்.மெல்வின் ராஜு மாநில அளவில் முதல் மாணவனாக வெற்றி பெற்றுள்ளார். மாநில அளவில் நடந்த  2019-2020 க்கான  நீச்சல் போட்டிகள் மதுரையில் நடைபெற்றது  நீச்சல் போட்டியில் கலந்து கொண்ட தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மாணவன் எஸ்.மெல்வின் ராஜு மாநில அளவில்  50 மீட்டர் நீளத்தை 47.38 வினாடிகளிழும் ,25 மீட்டர் நீளத்தை 21.43 வினாடிகளிழும் கடந்து முதல் மாணவனாக இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று உள்ளார் .இவர்  தூத்துக்குடி பி &டி காலனியை சேர்ந்த வழக்கறிஞர் சிவராஜின் மகன் ஆவர் .வெற்றிபெற்ற மாணவன் கோரம்பள்ளம் குளத்தில் எதிர் நீச்சல் அடித்து பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது . இவருக்கு  ஜோசப்,புதுராஜா,மைக்கேல் போன்றோர்  பயிற்சியாளர்களாக இருந்துள்ளனர். இது குறித்து தமிழ்நாடு நீச்சல் சங்க ...

சாவர்க்கர் பிரிட்டிஷாரிடம் மன்னிப்பு கேட்கவில்லை என்கிறது பா.ஜ.க அரசு - இது உண்மையா? வரலாறு சொல்வதென்ன?

  SHYAM NEWS 10.02.2020 சாவர்க்கர் பிரிட்டிஷாரிடம் மன்னிப்பு கேட்கவில்லை என்கிறது பா.ஜ.க அரசு - இது உண்மையா? வரலாறு சொல்வதென்ன? அரசு கூறுவது என்ன? ஆனால் தகவல் அறிந்தவர்களின் கருத்துப்படி, சாவர்க்கர் பல முறை ஆங்கிலேயர்களிடம் மன்னிப்பு கேட்டார். அது மட்டுமல்ல, பிரிட்டிஷ் அரசிடமிருந்து மாதந்தோறும் அறுபது ரூபாய் ஓய்வூதியமும் பெற்றார் சாவர்க்கர். சாவர்க்கர் அந்தமான் செல்லுலார் சிறையிலிருந்தபோது பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் மன்னிப்பு கேட்டாரா என்ற கேள்வி அண்மையில் நாடாளுமன்றத்தில் எழுந்தது. இது குறித்துப் பேசிய மத்திய கலாசார அமைச்சர் பிரஹ்லாத் படேல், சாவர்க்கர் ஆங்கிலேயரிடம் மன்னிப்பு கேட்டாரா இல்லையா என்பதை தெளிவுபடுத்தும் பதிவுகள் ஏதும் அந்தமான் -நிக்கோபார் நிர்வாகத்திடம் இல்லை என்று கூறியிருந்தார். "அந்தமான் மற்றும் நிக்கோபார் நிர்வாகத்தின் கலை மற்றும் கலாசாரத் துறையிலிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, செல்லுலார் சிறையில் இருந்தபோது, அவர் மன்னிப்பு கேட்டார் என்பதை உறுதிப்படுத்தும் ஆவணங்களோ அல்லது கருணை மனு கொடுத்ததாகவோ எந்த பதிவும் இல்லை" என்று அமைச்சர் கூறியிருந்தா...

தூத்துக்குடியில் 1000 க்கு ஆசைப்பட்டு 38 லட்சத்தை பறிகொடுத்த பெண்மணி மரணம் !.டி எஸ் பி நடவடிக்கை எடுக்கவில்லை என கணவர் குற்றச்சாட்டு !

SHYAM NEWS 08.02.2020 தூத்துக்குடியில் 1000 க்கு ஆசைப்பட்டு 38 லட்சத்தை பறிகொடுத்த பெண்மணி  மரணம் !.டி எஸ் பி நடவடிக்கை எடுக்கவில்லை என கணவர் குற்றச்சாட்டு ! தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு முனியசாமி நகரை சேர்ந்தவர் முனியதங்கம் (75) இவரது மனைவி தங்கப்பூ அம்மாள் (74) இவர்களுக்கு குழந்தைகள் இல்லை . இவர்கள் கூலிவேலை செய்து 1973 ல்  முள்ளக்காடு திருச்செந்தூர் ரோடு அருகில் 8 சென்ட் நிலம் வங்கி அதில் 7 சிறு வீடுகள் கட்டி அதை வாடகைக்கு விட்டு அந்த வருமானத்தில் வாழ்ந்து வந்து உள்ளனர். இந்தநிலையில் இவர்கள் உறவினர்ஆத்தூர்  செல்வகுமார் மற்றும் அவரின் மனைவி சுமதி  ஆகிய இருவரும் நாங்கள் உங்கள் இருவருக்கும் அரசு தரும் முதியோர் உதவி பணம் 1000 ரூபாய்  வாங்கி தருகிறோம் . அதற்க்கு உங்கள் பெயரில் எந்த சொத்தும் இருக்கக்கூடாது .முதியோர் பணம் கிடைத்தவுடன் மீண்டும் உங்கள் பெயருக்கு சொத்தை மாற்றி தந்துவிடுகிறோம் என கூறி செல்வகுமார் தனது பெயருக்கு மாற்றிக்கொண்டார் .ஆனால் கடந்த ஆண்டுவரை மதம் 5000 விட்டுச்செலவுக்கு தந்துகொண்டு  இருந்த செல்வகுமார் சுமதி தம்பதியினர் சிலமாதங...

நிர்பயா குற்றவாளிகள் 4 பேரையும் தனி தனியாக தூக்கிலிட அனுமதிக்க முடியாது_ உயர் நீதிமன்றம்

ஷ்யாம் நீயூஸ் 05.02.2020 புது தில்லி: நிர்பயா குற்றவாளிகள் 4 பேரையும் தனித்தனியாக தூக்கிலிட அனுமதிக்க முடியாது என்று தில்லி உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. ஒரே வழக்கு, ஒரே தண்டனை என்பதால் தண்டனையை தனித் தனியாக நிறைவேற்ற முடியாது என்று நீதிபதி சுரேஷ்குமார் கெய்ட் தெரிவித்துள்ளார். நிர்பயா வழக்கு குற்றவாளிகள் நான்கு பேரின் தூக்குத் தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளதை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மனு மீது விசாரணை நடத்திய தில்லி உயர்நீதிமன்றம், இன்று இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சுரேஷ் கெய்ட், குற்றவாளிகளை தனித்தனியாக தூக்கிலிட முடியாது என்று உத்தரவிட்டு, இது குறித்து மத்திய, மாநில அரசுகள் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.

வடமொழியில் இறைவணக்கம் பாடி தூத்துக்குடிசுப்பையா வித்யாலயம் பள்ளியில் ராஜ்ஜிய புரஸ்கார் வழங்கும் விழா நடைபெற்றது !

SHYAM NEWS   05.02.2020 வடமொழியில் இறைவணக்கம் பாடி தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பள்ளியில் ராஜ்ஜிய புரஸ்கார் வழங்கும் விழா நடைபெற்றது . தூத்துக்குடியில் சுப்பையா வித்யாலயம் மாணவியர் மேல்நிலை பள்ளியில் பாரத சரண சாரணியர் இயக்கம் ராஜ்ஜிய புரஸ்கார் வழங்கும் விழா நடைபெற்றது .இதில் தூத்துக்குடியில் உள்ள சரண சாரணியர் கலந்துகொண்டனர் .விழா வடமொழியில் இறைவணக்கம் பாடி ஆரம்பிக்கப்பட்டது பின்பு தமிழ்தாய் வாழ்த்து பாடினார் மற்றும் பரதம் நடனமாடி மாணவிகள் விருந்தினர்களை வரவேற்றனர் .இதில் மாவட்ட ஆட்சி தலைவர் சிறப்பு விருந்தினராக கந்துகொண்டார் .எஸ் தர்மராஜ்  பி .முருகானந்தம் ,எ .மங்கள்ராஜ் .முதன்மை கல்வி அலுவலர்  ஞானகௌரி ,  மாவட்ட கல்வி அலுவலர் இ. வசந்தா அகியோர்வாழ்த்துறை வழங்கினர் . மாவட்ட ஆணையர் சாரணர் பிரிவு ஆர் .சண்முகம் நன்றியுரையாற்றினார் .

அரசு திட்டங்களை மக்களிடம் கொண்டுசெல்லாத பி ஆர் ஓ ?தூத்துக்குடியில் தரை தட்டியது அ தி மு க வாக்கு வங்கி ?

SHYAM NEWS   04.02.2020 அரசு திட்டங்களை மக்களிடம் கொண்டுசெல்லாத  பி ஆர் ஓ ?தூத்துக்குடியில் தரை தட்டியது அ தி மு க வாக்கு வங்கி ? தமிழகத்தில் கடந்த மாதம் நடந்த உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது . அதில் அ தி மு க கூட்டணி அதிக இடங்களை பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது அதே வேலையில்  தி மு க உள்ளாட்சி தேர்தலில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை ஆனால் தி மு க அதிகமான இடங்களை கைப்பற்றியது .குறிப்பாக தூத்துக்குடி மாவட்டம் அ தி மு க கோட்டை என்றே கூறலாம் இதில் ஓட்டப்பிடாரம் இடை தேர்தலில் அ தி மு க தோல்வி அடைந்ததை அ தி மு க தொண்டர்களால் இன்னமும் ஜீரணிக்கமுடியாமல் உள்ளனர் .மற்றும் தமிழகத்தில் அரசு திட்டங்களை செயல்படுத்துவதில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் நந்தீப் சந்தூரி மிக சிறப்பாக செயல்பட்டார் அதற்காக பல விருதுகளையும் பெற்று உள்ளார் .தற்போதும் அரசு செயல்திட்டங்களை செயல்படுத்துவதில் அவருக்கு நிகர் அவரே என்பதுபோல் பம்பரமாக சுழன்று வருகிறார் .ஆனால் செயல்படுத்திய அரசு நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டிய தூத்துக்குடி மக்கள் தொரடர்பு அதிகாரி ஸ்ரீனிவாசன் சரியாக செயல்பட...