ஷ்யாம் நியூஸ்
09.04.2019
தூத்துக்குடியில் தமிழிசையை தோற்கடிக்க களம் இறங்கிய சிவசேனா கட்சி வேட்பாளர் ?
வரும் பாராளுமற்ற தேர்தலில் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களை தோற்கடிக்க படவேண்டும் என்று சிவசேனா இந்து சாம்ராஜ்ஜிய கட்சியின் மாநில தலைவர் மற்றும் சிவகங்கை ,தூத்துக்குடியில் போட்டியிடும் பாராளுமற்ற வேட்பாளருமான திரு ரா .நடராஜன் அவர்கள் இன்று (09.04.2019) தூத்துக்குடி பத்திரிக்கையாளர் மாற்றத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார் .மேலும் மற்ற மாநிலங்களில் எங்கள் கட்சி பிஜேபி ஆதரவு தெரிவித்தாலும் தமிழகத்தை பிஜேபி கடந்த ஆட்சி காலத்தில் கண்டு கொள்ளவில்லை மற்றும் பிரதமர் மோடிக்கு நெருக்கமான தொடர்பில் உள்ள மாநில தலைவர் தமிழிசை மற்றும் ஹெச் .ராஜா ஆகிய இருவரும் தமிழகத்திற்கு தேவையான நலத்திட்டங்களை பெற்று தரவில்லை ஆகவே தமிழிசை போட்டியிடும் தூத்துகுடியிலும் ஹெச் .ராஜா போட்டியிடும் சிவகங்கையிலும் இருவரையும் தோற்கடிப்பதற்காக தாம் இரு தொகுதிகளில் போட்டியிடுவதாக தெரிவித்தார் .தூத்துக்குடி மக்கள் என்னை வெற்றிபெற செய்தால் வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை கொடுக்க மகளிருக்கு உதவி தொகை ஒரு லட்சமாக உயர்த்தவும் அரசு மருத்துவமனைகளில் அணைத்தும் இலவசமாக்கப்படும் முதியோருக்கு மாதம் ஐந்து ஆயிரம் ,தினமும் அரை லிட்டர் பால் விவசாயக்கடன் தள்ளுபடி வருடத்திற்கு ஆறு சிலிண்டர் இலவசம் ஊனமுற்ற அனைவருக்கும் அரசு வேளை போன்ற திட்டகங்களை செய்வேன் என்றும் தெரிவித்தார் .இது எல்லாம் சாத்தியமா என்று செய்தியாளர்கள் கேட்டதிற்கு அரசியல் வாதிகள் லட்சம் கோடிகள் எப்படி சேர்த்தார்கள் மக்களுக்காக செயல்பட்டால் இது சாத்தியம்தான் என்று கூறினார் .தூத்துக்குடியில் தாங்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவான நிலைப்பாட்டில் உள்ளோம் என்றும் தெறிவித்தார் .இதில் சிவசேனா இந்து சாம்ராஜ்ஜிய கட்சியின் மாநில தலைவருடன் மாநில பொது செயலச்செயலாளர் M P முருகன் மாநில துணை தலைவர் K நரசிம்மன் மாநில இளைஞரணி தலைவர் K .கர்ணன் மற்றும் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர் தங்கள் சின்னமான சிலிண்டர் சின்னத்தில் பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர் .