ஷயாம்நீயுஸ்
27.04.2019
ஓட்டப்பிடாரம் தொகுதி யாருக்கு ?
27.04.2019
ஓட்டப்பிடாரம் தொகுதி யாருக்கு ?
சட்டப்பேரவையின் நான்கு சட்டமன்ற தேர்தல் தேதியான மே 19 ஐ மக்கள் ஆவளோடு எதிர்பார்க்கின்றனர் அதிலும் ஓட்டப்பிடாரம் தொகுதி அணைத்து கட்சி வேட்பாளார்களும் சமபலத்துடன் மோதுவதால் விறுவிறுப்பு அடைந்து உள்ளது .இந்த சூழ்நிலையில் மேலும் இரு வேட்பாளர்கள் திரு ராஜ் வயது 45 சுயட்சையாக வேட்பு மனு தாக்கல் செய்துஉள்ளர் .இவர் தூத்துக்குடி காலான்கரையை சார்ந்தவர் மற்றும் புதுகோட்டையை சார்ந்த அக்ரீ பரமசிவனும் போட்டியில் பங்கு பெற்று உள்ளார் .
தி மு க சார்பில் திரு சண்முகையா அம்மா மக்கள் முன்னேற்ற கழக சார்பில் திரு சுந்தரராஜ் ஆ தி மு க சார்பில் திரு மோகன் ஆகியோர் கட்சியின் சார்பில் போட்டியிடுகின்றனர் .நேற்று (26.04.2019) மட்டும் தி மு க உட்பட 8 சுயேட்சை வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்தனர் .வேட்புமனு கடைசி நாள் ஏப்ரல் 29 ஆம் தேதி ஆகும் .வேட்புமனு பரிசீலனை ஏப்ரல் 30 ஆம் தேதி நடைபெறுகிறது .மனுக்களை திரும்பப்பெற மே 2-ஆம் தேதி கடைசிநாளாகும் .மே 19 தேதி வாக்குப்பதிவு நடைபெற்று ,மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிகை நடைபெறுகிறது .