முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக சிறப்பு சட்டம் ஏற்றபடும்-தூத்துக்குடியில் ஸ்டாலின் வாக்குறுதி!


ஷயாம்நீயுஸ்
10.04.2019

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக சிறப்பு சட்டம் ஏற்றப்படும் என ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதி !


மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக போட்டியிடும் நாடாளுமன்ற வேட்பாளர் கனிமொழி கருணாநிதி விளாத்திகுளம் சட்டப்பேரவை வேட்பாளர் ஜெயக்குமார் ஆகிய இருவரையும் ஆதரித்து தூத்துக்குடி புதுக்கோட்டையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்*

*இந்தப் பொதுக் கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட திமுக மாவட்ட செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார் வடக்கு மாவட்ட திமுக மாவட்ட செயலாளர் கீதா ஜீவன் முன்னிலை வகித்தார்.

தமிழ்நாட்டில் நடக்கும் பினாமி ஆட்சி தனது கட்சிக்கு துரோகம் செய்யும் எடப்பாடி ஆட்சியும் மத்தியிலே ஆட்சி செய்யக்கூடிய மோடியின் ஆட்சிக்கும் விடை கொடுக்கும் நாள் மே 23 இந்த மே 23-இல் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்பது உறுதி என்று கனிமொழி கருணாநிதி அவர்கள் பேசினார்.

பாராளுமன்ற தேர்தலுக்கு நடக்கும் 40 நாடாளுமன்ற பாண்டிச்சேரி உட்பட தூத்துக்குடி நாடாளுமன்ற வேட்பாளர் கனிமொழி கருணாநிதியையும் 18 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் விளாத்திகுளத்தில் போட்டியிடும் ஜெயக்குமாரையும் வெற்றி பெற்றிட வேண்டும் என்று உங்களிடம் நாடி தேடி ஓடி உங்களிடம் வாக்கு சேகரிக்க வந்திருக்கிறேன் நாங்கள் வாக்குகள் மட்டும் சேகரிக்க வருவோம் என்று நினைக்க வேண்டாம் மக்கள் பணியாற்றிட என்றும் திமுக உழைத்து கொண்டே இருக்கும்.

கலைஞர் இருந்திருந்தால் தூத்துக்குடிக்கு வந்து உங்களிடம் கனிமொழிக்காக வாக்குகளை கேட்டிருப்பார் ஆக அவர் நம்மிடம் இல்லை அவரது சார்பாக அவரது மகனாக நான் உங்களிடம் வாக்குகளை கேட்டு வந்துள்ளேன்.

இந்த மண் வ உ சி சிதம்பரனார் கப்பலோட்டிய தமிழன் என்று அழைக்கப்படும் அவரது மண் வீரம் விளைந்த இந்த மண் என்று பெருமிதம்.

முதலாவதாக திருவாரூரில் இருந்து தேர்தல் பிரச்சார பயணத்தை தொடர்ந்த நான் இன்று தூத்துக்குடியில் கனிமொழி கருணாநிதியை அறிமுகம் செய்வதை கலைஞரை அறிமுகம் செய்வது போல் தான் என்று பெருமிதம் நினைக்கிறேன்

சமூகப் போராளி கனிமொழி ஒரு சிறந்த பத்திரிக்கையாளர் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் அவர் தூத்துக்குடி நாடாளுமன்ற வேட்பாளராக கிடைத்தது சிறப்பு அவர் உங்களுக்கு tigerஆக கிடைத்துள்ளார் என்று நினைத்துக் கொள்ளுங்கள் ஆக இந்த கேடுகெட்ட ஆட்சியை ஒரு மாதம் அல்ல ஒரு நொடி போதும் வீட்டுக்கு அனுப்ப.

ஸ்டெர்லைட் போராட்டத்தில் 13 பேர் காக்கா குருவிகள் போல் சுட்டு கொலை செய்த அதிமுக மற்றும் பிஜேபி கொலைகார அரசை வரும் பதினெட்டாம் தேதி நீங்கள் செலுத்தும் வாக்கின் மூலம் இதற்கு வெற்றியை பெறுவதற்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

*துப்பாக்கிச் சூட்டில் பலியான போது எதிர்க்கட்சியாக இருந்த நான் ஓடோடி வந்து இந்த மக்களை பார்த்தேன் ஆனால் இந்த எடப்பாடி அரசு அதற்கு கூட வரவில்லை  அது போகட்டும் ஒரு இரங்கல் அறிக்கை கூட தெரிவிக்கவில்லை*

*இங்கே போட்டியிடும் பாரதிய ஜனதாவின் வேட்பாளர் தமிழிசை விமானத்தில் தூத்துக்குடி வரும்பொழுது தனக்கு பின் இருந்தமாணவி சோபியா பாசிச பாஜக ஒழிக என்று கூறியதைக் கேட்டமுடியாத தமிழிசை அந்தப் பெண்ணை கொச்சைப்படுத்தி கேவலப்படுத்தி தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி கைது செய்யக் காரணமாக இருந்தவர் இந்த தமிழிசை*


*இப்பொழுது ஸ்டாலின் நான் சொல்கிறேன் பாசிச மோடி பாஜக ஒழிக என்று சொல்லுகிறேன் கைது செய்ய தயாரா*

*தமிழிசை அவர்களே உங்களுக்கு தூத்துக்குடி தான் கிடைத்ததா உங்கள் கட்சியினரே உங்களை பழிவாங்குவதற்காக வேட்பாளராக அறிவிக்கப் பட்டது போல் தெரிகிறது அவர் வெற்றி பெற மாட்டார் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்அவருக்காக நான் இப்பொழுதே என்னுடைய அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்*

*பிற்படுத்தப்பட்ட தலித்துகள் சிறுபான்மையின பழங்குடியின மக்களுக்கு உதவிக்கரம் நீட்டியவர் கலைஞர் ஆனால் இப்போது நடக்கும் ஆட்சியோ உதவாக்கரை எடப்பாடி ஆட்சி என்று விமர்சனம் செய்தார் ஸ்டாலின்*

*மோடி அவர்கள் உத்தர பிரதேஷ் குஜராத்தில் கலவரத்தை ஏற்படுத்தி இப்பொழுது தமிழகத்திலும் அந்த நிலைமையை பயன்படுத்த இந்த ஆட்சி துணை போகிறது*

*ஜூன் 3-இல் கலைஞர் பிறந்த நாளில் இந்தப் பாசிச மோடியின் ஆட்சியும் உதவாக்கரை எடப்பாடியின் ஆட்சியும் வீட்டுக்கு அனுப்பப்படும் இதே மேடையில் கனிமொழி வெற்றி விழா நடத்தப்படும் என்று ஸ்டாலின் சூளுரைத்தார்*

*வருகின்ற பதினெட்டாம் தேதி நடக்கும் தேர்தலில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை தாருங்கள் என்று ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்*

*இந்த பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்*

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...