ஷயாம் நியூஸ்
23.01.2019
தூத்துக்குடி
தூத்துக்குடி ஏ.பி.சி கல்லூரியில் மாணவிகளுக்கு புதுவித தண்டனை .
மாணவிகளின் பெற்றோர்கள் புலம்பல்.
தூத்துக்குடி ஏ.பி.சி கல்லூரிக்கு வாகனங்கள் பழுது, பேருந்தின் தாமதம் காரணமாகவும், சில தவிர்க்க முடியாத காரணங்களினாலும் தாமதமாக வரும் கல்லூரி மாணவிகளை வாசலின் வெளியே நிறுத்தி வைத்து அவர்களது அடையாள அட்டைகளை பிடுங்கி வைத்து கொண்டு அவர்களின் பெற்றோர்களை வரவழைத்ததோடு மட்டுமில்லாமல் மாணவிகளை பல மணி நேரம் நூலகத்தில் காக்க வைத்தும் மாணவிகளின் மாண்பிற்கு களங்கம் ஏற்படுத்தி வருகின்றனர் இதனால் மாணவிகள் அன்று முழுவதும் பாடத்தில் கவணம் செலுத்த முடியாமல் அவதிபடுகின்றனர்.அன்பால் திருத்தாமல் மன அழுத்தம் ஏற்படுதுபோல் தண்டனை தருவது அவர்களுக்கு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும் என்றும் இது குழந்தைகள் மீது திணிக்கப்படுகின்ற சட்டவிரோத செயல் என்றும். இச் செயலினை நிர்வாகம் நிறுத்திகொள்ளவேண்டும் மாணவிகள் அச்சமின்றி மாண்பிற்கு களங்கம் ஏற்படாதவாறு பார்த்க்கொள்ளவேண்டும் .பெண்கள் நாட்டின் கண்கள் பெண்குழந்தைகளை பாதுகாப்போம் என்று பேசினால் மட்டும் போதாது அதை செயல் படுத்த கல்லூரி நிர்வாகம் முன்வரவேண்டும் என்று குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிரான கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை வைத்தனர். மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளிடம் மணு கொடுக்கபோவதாகவும் தெறிவித்தனர்.