ஷ்யாம் நியூஸ்
04.01.2019
பள்ளிகூடத்திற்க்கு படிக்க வருகிறதா பாம்புகள்?!பயத்தில் மாணவர்கள்!
தூத்துக்குடி 04.01.2019
தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி யூனியன் கோரம்பள்ளம் கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட காலான்கரை கிராமத்தில் ஊராட்சிய ஒன்றிய கிராமிய தொடக்கப்பள்ளி உள்ளது.இங்கு ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புவரை உள்ளது.இதில் சுமார் நூறு குழந்தைகள் பயில்கிறார்கள். இந்த பள்ளி கட்டிடம் சுவர்களை ஒட்டி விறகுகளை வைத்தும் ஆடு மாடுகள் கட்டியும் பள்ளி நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர்.
இதனால் பள்ளி வளாகத்தின் உள்பகுதிகள் புத்தர்களாக
உள்ளன ஆகவே அங்கு பாம்புகள் மற்றும் விஷ பூச்சிகள் தங்க ஏதுவாக உள்ளது.அடிக்கடி பாம்புகளை பார்க்க முடிகிறது இளம்கன்று பயம் அறியாது என்பது போல் பள்ளி குழந்தைகள் அந்த இடங்களில் விளையாடி வருகின்றனர். ஆடு மாடுகளை விஷ பூச்சிகள் வராமல் இருக்க ஆக்கிரம பகுதிகளை அகற்றி சுற்றுசுவர் கட்டி நுழைவுவாயிலில் கதவு அமைக்கவேண்டும் எனவும் இதை பள்ளி மாணவ மாணவிகளின் எதிகாலத்தை மனதில் வைத்து தூத்துக்குடி யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மாவட்ட நிர்வாகமும் உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்