22.01.2019
தூத்துக்குடி
தூத்துக்குடி நீதிமற்ற வளாகத்தில் பரபரப்பு
தூத்துக்குடி மாவட்டம் காலாங்கரை கிராமத்தில் உள்ள கோவில்பூஜை செய்வது சம்மந்தமாக இதுவரை பூஜை செய்து வந்த ஓய்வு ரெஜித்ரார் சொக்கலிங்கம் குடும்பத்துக்கும் கோரம்பள்ளத்தில் குடியிருக்கும் வக்கீல் செந்திலுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையில் பூஜையை யார் செய்வது என்று தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்கும் நடந்துவருகிறது .மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் செந்தில்குமார் தரப்பினருக்கும் சொக்கலிங்கம் தரப்பினருக்கும் மற்றும் அதே ஊரை சார்ந்த இருவரின் வழக்கும் ஒரே நேரத்தில் 22.01.2019 வந்தது .மற்றும் வழக்கறிஞர் செந்தில்குமார் அவரின் குற்றவழக்கில் இருந்து தப்பிப்பதற்காக கிராமத்தில் இருந்து 100 கும் மேற்பட்டவர்களை சமாதானம் பேச தனி வேனில் அழைத்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நீதிபதி திருமதி எஸ் .தமிழ் செல்வி பி .ஏ. எல். எல். எம் வழக்கை வருகிற ஏப்ரல் 11 ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
மேலும் புகார்தாரர் ஒருவர் கூறும்போது வழக்கறிஞர் செந்தில்குமார் மூலம் பணம் 4000 வாங்கிக்கொண்டு அப்போது இருந்த ஆய்வாளர் சாந்தகுமரி
தற்போது இருக்கும் காவலர் செல்வம் மற்றும் காவலர் 1040 கணேசன் ஆகியோர் வழக்கு எண் 36/2017 உள்ள சபரிவசன் என்பவரை புகார்தாரர் எங்களுக்கு தெரிவிக்காமல் விட்டு விட்டனர் .காவல் நிலையத்தில் பணம் கொடுப்பவர்களுக்கு ஒரு மாதிரியும் பணம் இல்லாதவர்களுக்கும் ஒரு மாதிரியும் எழுதி உள்ளார்கள் .இது சம்பந்தமாக பலமுறை அன்றய கண்காணிப்பாளர்க்கு தெரிவித்து உள்ளோம் மற்றும் நேர்மையான அதிகாரிகள் கொண்டு விசாரிக்க பட வேண்டும் என்றும் ஒருதரப்பு குற்றம் சாட்டுகின்றனர் .மறுதரப்பினர் கருத்து ஏதும் கூறவில்லை ஒரு சில பொது மக்கள் சண்டை போடாமல் ஊர் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து விடலாம் . இந்த கோவில் பிரச்சனையால் சொந்தத்திற்குள் ஒருவருக்கு ஒருவர் பேசமுடியாமல் இருக்கிறது என்றும் .ஊரில் ஒரு சிலர் கொஞ்ச நாளைக்கு கோவிளை ஒருவர் கட்டுப்பாட்டில் இல்லாமல் அரசு கட்டு பாட்டில் வைத்து கொண்டாலே ஊர் ஓன்று சேர்ந்துவிடும் என்றும் .தற்பொழுது ஊர் மூன்று பிரிவாக உள்ளது என்றும் அதிகாரிகள் ஓன்று சேர்த்து வைக்கவேண்டும் என்றும் சிலர் கூறினார் .