ஷியாம் நியூஸ் 30.11.2018 தூத்துக்குடியில் லஞ்ச வழக்கில் அதிகாரி கைது! தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம் சாயர்புரத்தில் அநேக கல்லூரிகளும் பள்ளிகளும் இயங்கி வருகிறது. இவைகளுக்கு ஆண்டுதோறும் சுகாதாரச் சான்றிதழ் தேவைப்படுகிறது.அனைத்து நிறுவனங்களிலும் எல்லா அடிப்படை வசதிகள் இருந்தும் சுகாதார சான்றிதழ் வழங்குவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது. சாயர்புரம் Dr.G.U.போப் கல்வியியல் கல்லூரியில் அங்கீகாரம் தொடர்பாக சுகாதார சான்றிதழ் தேவைப்படுகிறது. இந்த சான்றிதழ் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் திரு.ஆழ்வாரப்பன் அவர்களால் வழங்கப்பட வேண்டும் .அவர் சான்றிதழை வழங்குவதற்கு ₹65000 லஞ்சமாக பேரம் பேசி,இறுதியில் ₹25000 க்கு சான்றிதழ் தருவதாக, கல்லூரியில் வேலை செய்யும் திரு.I.ஜெயக்குமார் அவர்களிடம் உறுதியளித்தார். கல்லூரியில் எல்லா அடிப்படை வசதிகள் இருந்தும் சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்பதால் திரு.ஜெயக்குமார் அவர்கள் லஞ்சம் கொடுக்க விரும்பாமல் தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் செய்தார் .இதனால் தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை காவல் துணை கண்காணிப்பாளர் திரு.ஹெக்டேர் அவர்...