தூத்துக்குடியில் பீடி குடித்த கூலி தொழிலாளி மீது வழக்கு பதிவு செய்த காவல்த்துறை -வேலையை இழந்து தவிக்கும் தொழிலாளிகள் ?
ஷ்யாம் நியூஸ் 30.04.2020 தூத்துக்குடியில் பீடி குடித்த கூலி தொழிலாளி மீது வழக்கு பதிவு செய்த காவல்த்துறை -வேலையை இழந்து தவிக்கும் தொழிலாளிகள் ? தூத்துக்குடியில் மூட்டை தூக்கும் தொழிலாளிகள் இருவர் மீது பீடி குடித்ததாக தூத்துக்குடி சிபிகாட் காவல்த்துறையினர் வழக்கு பதிவு செய்து உள்ளனர் . கொரானா தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளதால் ஏழை மக்கள் கூலி தொழிலாளிகள் இருப்பதை உண்டு வீட்டில் ஒரு மாதமாக இருந்து வந்தனர் .இந்த நிலையில் தமிழக அரசு ஏற்றுமதி இறக்குமதி நிறுவனங்கள் மற்றும் அத்தியாவசிய உற்பத்தி மேற்கொள்ளும் நிறுவங்கள் செயல் பட அனுமதி அளித்தது . தூத்துக்குடி சிபிகாட் பகுதியில் மத்திய அரசு நிறுவனமான CWC குடோனில் கண்டைனர் பெட்டியில் உள்ள பொருட்களை ஏற்றி இறக்கும் பணி நடந்து உள்ளது .8 மணிக்கு தொடங்கிய பணியில் ஈடுபட்டிருந்த கூலி தொழிலாளி மு .பாலமுருகன் மற்றும் வினோத் ஆகிய இருவரும் காலை 9.30 மணியளவில் குடோன்வெளிப்புறம் உள்ள கோட்டை சுவர் அருகே சிறுநீர் கழித்துவிட்டு களைப்பு போக சமூக இடைவெளி விட்டு இருவரு...