ஷ்யாம் நியூஸ் 28.03.2020 தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை கொரானா தொற்று இல்லை_ ஆட்சியர் தகவல். மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் விரைவாக கிடைக்க வியாபாரிகளுடன் ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது. 144 தடை உத்தரவை தொடர்ந்து மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்வதில் உள்ள சிறமத்தை சரி செய்ய வாகனங்கள் மற்றும் அதில் ஈடுபடும் பணியாளர் களுக்கு தனி அடையாள அட்டை வழங்கப்படும் என தெரிவித்தார்.உற்பத்தி பொருட்கள் விவசாய பொருட்கள் கொண்டு செல்ல வாகனங்கள் நகர்வதர்க்கு தாலுகா வாரியாக அடையாள அட்டை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை தூத்துக்குடி மாவட்டத்தில் 1621 நபர்கள் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என கணக்கு எடுக்கப்பட்டு தனிமை படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.மேலும் 41 குழுக்கள் அமைத்து வெளிநாட்டில் இருந்து வந்தவர்களை தேடிவருகின்றனர்.இந்த நோய் 99.99% வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் மூலம் வந்துள்ளதால் இவர்களை கண்காணிப்பதில் திவிரபடுத்தப்பட்டு உள்ளது. இதுவரை தூத்துக்குடி மாவட்டத்தில் 16 நபர்கள் கொரானா அறிகுறிகள் உள்ளவர்களுக்கு சோதனை செய்...