மாணவி ஸ்ரீமதி மரணம் குறித்து மத்திய அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும் : காயல் அப்பாஸ் வலியுறுத்தல் ! ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது. டெல்லியில் ஐ ஏ எஸ் பயிற்சி படித்து வந்த ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலத்தை சேர்ந்த மாணவி ஸ்ரீமதி நேற்றையை முன் தினம் அவர் தங்கும் அரையில் மரண அடைந்தார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளித்துள்ளது. வட மாநிலங்களில் . தமிழக மாணவ மாணவிகள், தற்கொலைகள். படு கொலைகள் இது போன்ற சம்பவங்கள் தொடந்த வண்ணமாக உள்ளது மாணவி ஸ்ரீமதியின் மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தி இதன் பின்னனி காரணம் என்ன வென்று கண்டறிய வேண்டும் மெனவும் இது போன்ற உயிரிழப்பு சம்பவங்கள் நடை பெறாமல் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் . மேற்படிப்பிற்காக வட மாநிலங்கள் சென்று படித்து வரும் தமிழக மாணவ மாணவிகளுக்கு மத்திய அரசு மாநில அரசுகள் பாதுகாப்பு அளித்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது . மாணவி ஸ்ரீமதியை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் ...