ஷ்யாம் நீயூஸ் 04.01.2022 தமிழகத்தில் குற்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளது அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேட்டி! தமிழகத்தில் குற்ற சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது மக்கள் இந்த அரசு மீது கோபத்தில் இருக்கிறார்கள் எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடி தலைமையில் அதிமுக மாபெரும் வெற்றி பெறும் என தூத்துக்குடியில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார். தூத்துக்குடி தெற்கு மாவட்ட அஇஅதிமுக சார்பில் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் பணியாற்றுவது மற்றும் பூத் கமிட்டி அமைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில், அதிமுக அம்மா பேரவை செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரும் , முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா, எம்ஜிஆரின் பிறந்த தின விழா, மற்றும் அதிமுகவின் 51 வது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு வருகிற பிப்ரவரி 23ஆம் தேதி மதுரையில் 51 எழை,எளிய மக்களுக்கு நடைபெறும் சமத்துவ சமு...