ஷ்யாம் நீயூஸ்
09.03.2022
தூத்துக்குடி அருகே நடு சாமத்தில் காவல் தெய்வத்திற்கு பூஜை! காட்டுக்குள் ஆட்டுக்கறி அன்னதானம் !
தூத்துக்குடி அத்திமரப்பட்டி காலான்கரை கிராம சாலையில் உள்ள விவசாயிகளின் காவல் தெய்வமாக இருக்கும் வீரி அம்மனுக்கு 20 வது ஆண்டாக நேற்று அத்திமரபட்டி விவசாயிகள் நடத்திய நள்ளிரவு பூஜை நடைபெற்றது.பின்பு இரவு 1மணியளவில் ஆட்டு கறியுடன் கூடிய அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் அத்திமரப்பட்டி, காலாங்கரை, வீர நாயகன் தட்டு ,மற்றும் சுற்றுவட்டார கிராம விவசாய பொதுமக்கள் கலந்து கொண்டனர். விவசாயிகளின் காவல் தெய்வமாக வழிபட்டு வரும் வீரியம்மனுக்கு ஆண்டுதோறும் நள்ளிரவில் பாரம்பரிய பூஜை வழிபாடு நடத்துவதோடு அன்னதானமும் வழங்கி அப்பகுதி விவசாயிகள் சிறப்பித்து வருகின்றனர். இதில் 3ம் மடை விவசாய சங்க தலைவர் ஆட்சி முத்துதங்கம், மண்டல உறுப்பினர் செல்வமணி,விவசாயி முருகன்,2ம் மடை தலைவர் திருமால்,விவசாயி கோவில்மணி,விவசாயி பொண்ணுதுறை,காலான்கரை விவசாயி இருளப்பன் மற்றும் விவசாயிகள் பலர் ஒன்றினைந்து விழாவை நடத்தினர்.