ஷ்யாம் நியூஸ்
18.03.2022
ஆறு வயது சிறுமி இரண்டு முறை உலக சாதனைபடைத்து அசத்தியுள்ளார்
மதுரை அச்சம்பத்தில் இயங்கிவரும் மது இன்ஸ்டிடூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் இன் நிறுவனர் மரு.வெ.பரத் அவர்களின் மகள் ப.மதுவிந்த்ரா மதுரை நாகமலை புதுக்கோட்டையில் இயங்கி வரும் SBOA CBSE பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.இவர் இவருடைய தந்தை பயிற்சி செய்து வரும் எலக்ட்ரோஹோமியோபதி மருத்துவமுறையை பற்றி மிக எளிதாக 4.52 நிமிடங்களில் வகுப்புகள் எடுத்து "எக்ஸ்ட்ராடினரி கிட் " என்ற புதிய உலகசாதனையை படைத்துள்ளார்.இவருடைய உலக சாதனையை வேல்ட் புக் ஆப் ரிக்கார்ட்ஸ்,வேல்ட் ரிக்காட்ஸ் இந்தியா,யூனிக் வேல்ட் ரிக்கார்ட்ஸ்,ஸ்டேட் அப்ரூவ்டு வேல்ட் ரிக்காட்ஸ்,கிரேட் வின்னர்ஸ் வேல்ட்ரிக்கார்ட்ஸ்,மேஜிக் புக் ஆப் வேல்ட் ரிக்கார்ட்ஸ்,கிங்டம் புக் ஆப் வேல்ட் ரிக்கார்ட்ஸ் ஆகியவை இவருடைய உலகசாதனையை பதிவு செய்துள்ளது.
*இவருடைய உலக சாதனையான 4.45 நிமிடங்களில் வகுப்புகள் எடுத்ததை இரண்டே நாட்களில் இவரே முறியடித்து எலக்ட்ரோஹோமியோபதி மருத்துவமுறையை 2.50நிமிடங்களில் வகுப்புகள் எடுத்து மற்றும் ஒரு புதிய உலகசாதனையைப்படைத்துள்ளார் இந்த உலகசாதனையை மிம்ஸ் புக் ஆப் வேல்ட் ரிக்கார்ட்ஸ், கிரேட் ஆசியன் புக் ஆப் வேல்ட் ரிக்கார்ட்ஸ் பதிவு செய்துள்ளது.இவர் உலகசாதனை புரிந்ததை SBOA பள்ளியின் தாளாளர்,தலைமை ஆசிரியர் மற்றும் மற்ற ஆசிரியர்கள் அனைவரும் பாராட்டினார்கள்.*