தூத்துக்குடியில் மீண்டும் கலவரத்தை தூண்ட நினைக்கும் ஸ்டெர்லைட் ஆதரவாளர்களை கைது செய்ய வேண்டும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழு கண்காணிப்பாளரிடம் புகார்!
ஷ்யாம் நியூஸ்
29.03.2022
தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ந் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியானார்கள். இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழக அரசு, ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது விசாரணை நடைபெற்று வருகிறது .
இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் பொதுமக்களிடம் ஆதார் எண் தாருங்கள் பணம் தருகிறோம் அரிசி தருகிறோம் மளிகை பொருட்கள் தருகிறோம் மீன்பிடி வலை தருகிறோம் வீடு கட்டித் தருகிறோம் மக்கள் குறை தீர்ப்பு நாளில் மனு கொடுக்க வந்தால் குறிப்பிட்ட தொகை தருகிறோம் என தொடர்ந்து ஆசை வார்த்தைகள் கூறி வருவதோடு
மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை பெயரில் ஸ்டெர்லைட் ஆலை கைக்கூலிகள் செயல்பட்டு வருகின்றனர் மூடப்பட்ட ஆலை பெயரில் செயல்பட சட்டப்படி அனுமதி இல்லை என்றும்
ஸ்டெர்லைட் ஆலை தூத்துக்குடி மக்களை பிளவுபடுத்தி ஒற்றுமையை சீர்குலைக்க தொடர்ச்சியாக ஈடுபட்டு வரும் தருவாயில் நேற்று 28 .3. 2022 இரவு பாத்திமா நகரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஒன்று திரண்டு மக்களை பிளவுபடுத்தும் ஸ்டெர்லைட் நயவஞ்சக சூழ்ச்சியை கண்டித்து கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர் என்றும்
இதற்கு முழுக் காரணமாக மூளையாக இருந்து செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் அதிகாரிகளையும் அதன் கீழ் இயங்கும் ஸ்டெர்லைட் கைக்கூலி ஆதரவாளர்களையும் கைது செய்ய வேண்டும் என்று பெயர்கள் சேர்க்கப்பட்ட புகார் மனுவை தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளரிடம் கொடுத்தனர்.