ஷ்யாம் நீயூஸ்
10.03.2022
தூத்துக்குடியில் 100 ஆண்டுகளுக்கு மேலான கோவிலை இடிக்க மதுரை உயர்நீதிமன்றம் தடை!
தூத்துக்குடி 100 ஆண்டுகளுக்கு மேலான கோவிலை இடிக்க மதுரை உயர்நீதிமன்றம் தடை விதி;த்துள்ளது. தூத்துக்குடியை சேர்ந்த கதிரேசமணி சார்பில் மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஜெயச்சந்திரன் தாக்கல் செய்த வழக்கில் தூத்துக்குடியில் 100 ஆண்டுகளுக்கு மேலாக பழைமை வாய்ந்த பிரதிபெற்ற வரதவிநாயகர் கோவில் இருந்து வருகிறது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அவர்களின் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட இரயில் நிலையம் தூத்துக்குடி மாவட்டம் வளர்ச்சியடைந்த பிறகு போக்குவரத்து நெரிசல் மற்றும் கீழ்பாலம் மேம்பாலம் அமைப்பதாலும் கடல்நீர் மற்றும் மழைநீர் சாக்கடை கால்வாய் நீர்கள் உட்புகும் அபாயமும் மேலும் மாவட்ட கலெக்டர் அலுவலகம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் முக்கிய அரசு அலுவலகங்கள் மீளவிட்டான் இரயில் நிலையம் அருகில் உள்ளதாலும் விமானநிலையம் மீளவிட்டான் அருகில் இருப்பதாலும் தூத்துக்குடி மாநகர் புதுக்கோட்டை வரை பரந்து விரிந்து விட்டதால் மாவட்டத்தின் எந்த பகுதியிலிருந்து வந்தாலும் இரயில் நிலையத்திற்கு எளிதில் வந்தடைய கூடிய நிலையில் மத்திய பகுதியில் உள்ளதாலும் மீளவிட்டான் இரயில் நிலையம் மிகப்பெரிய பரப்பளவு கொண்டுள்ளதால் திருவனந்தபுரம் நெல்லை மும்பை எக்ஸ்பிரஸ் இரயில்கள் வந்து செல்ல தரம் வாய்ந்ததாக இருப்பதால் இரயில் நிலையத்தை மீளவிட்டானுக்கு மாற்றி மக்கள் வரிப்பணம் வீணாகாமல் வளர்ச்சி திட்டத்தை செயல்படுத்த வேண்டும். எனவே 2ம் கேட் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கையை வலியுறுத்தியுள்ளனர்.