முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சைபர் குற்றங்களை விசாரிக்க தனி கோர்ட்டு அமைக்க தேசிய சைபர் பாதுகாப்பு இயக்குனர் வலியுறுத்தல்!

 ஷ்யாம் நியூஸ்

19.03.2022

சைபர் குற்றங்களை விசாரிக்க தனி கோர்ட்டு அமைக்க தேசிய சைபர் பாதுகாப்பு இயக்குனர் வலியுறுத்தல்!


சைபர் குற்றங்களுக்கு என கோர்ட்டுகள் உருவாக்கினால் இவ்வகை குற்றங்களுக்கு உடனே தீர்ப்பு கிடைக்க வாய்ப்பு அதிகரிக்கும் என தூத்துக்குடி வஉசி கல்லூரியில் நடந்த விழாவில் தேசிய சைபர் பாதுகாப்பு நிறுவன இயக்குனர் காளிராஜ் பேசினார்.

வ உ சி கல்லூரியில் நடந்த தேசிய சைபர் கிரைம் பயிற்சி மையம் துவக்க விழாவிற்கு மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். வ உ சி சிதம்பரம் கல்வி நிறுவன செயலாளர் ஏபிசிவி சொக்கலிங்கம் தலைமை உரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் வீரபாகு வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட எஸ்பி பாலாஜி சரவணன் பேசுகையில் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பதில் கவனம் தேவை அதிக வருமானம், புகழ், அழகு போன்ற அம்சங்கள் உள்ள பெண்ணை திருமணம் செய்தால் சந்தோஷமான வாழ்க்கை அமையும் என்பது இல்லை உண்மையில் அன்புடன் வாழ்வதே சிறப்பான வாழ்க்கை என்றார்.

டெல்லியில் உள்ள தேசிய சைபர் பாதுகாப்பு நிறுவன இயக்குனர் காளிராஜ் பேசுகையில் நல்ல குருவால் மட்டுமே சிறந்த தலைவர்களை உருவாக்க முடியும் ஆசிரியர்களிடம் பிரம்பால் அடி வாங்கியதால் இன்று உங்கள் முன் நிற்கிறோம். ஆசிரியர்கள் என்பவர்கள் சிற்பிகள் மாணவர்களை செதுக்குபவர்கள். அந்த சிற்பிகளுக்கு தற்போது மாணவர்கள் பயமுறுத்தி கற்றுக் கொடுக்கின்றனர். இது நாட்டுக்கும் நமக்கும் நல்லதல்ல இந்தியாவில் மிகத் திறமையான இளைஞர்கள் உள்ளனர். இவர்களை குறிவைத்து ஆண்ட்ராய்டு செல்போன்களில் ஆப் விளையாட்டு போன்றவற்றை இலவசமாக தருகின்றனர். இதனால் இளைஞர்களின் திறமை பாதிக்கப்படுகிறது. சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த கல்லூரியில் மையம் துவக்கப்பட்டுள்ளது. சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து போலீசில் புகார் கொடுத்தால் பயிற்சி பெற்ற போலீசார் இல்லை இதை கருத்தில் கொண்டுதான் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கிறோம். இவர்கள் முதலுதவி பயிற்சியாளர்கள் போல சைபர்கிரைம் பயிற்சியாளர்கள் உடனடி நடவடிக்கையில் இறங்குவார் சிறுமிகள் ஆபாச படம் குறித்து முதன் முதலில் குரல் எழுப்பினர். அதன்பின் சைபர் கிரைம் தகவல் தொழில்நுட்பவியல் சட்டம் கொண்டுவரப்பட்டது. சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷன்கள் போல சைபர் கிரைம் கூட்டுகள் உருவாக்கப்பட வேண்டும். இதன் மூலம் இவ்வகை குற்றங்கள் தேங்காமல் உடனடி தீர்ப்பு கொடுக்க வாய்ப்பு அதிகம் உள்ளது வளர்ந்து வரும் தகவல் தொடர்பியலில் தகவல் பாதுகாப்பு வல்லுநர்கள் ஏராளமானோர் தேவைப்படுகின்றனர். லட்சக்கணக்கில் சம்பளம் தர நிறுவனங்கள் தயாராக உள்ளன. இதனை மாணவர்கள் பயன்படுத்த வேண்டும் என்றார்.

இதில் பங்குபெற்ற மாவட்ட சுமதி நீதிபதி டி டிஜே அவர்கள் மாணவர்களுக்கு கூறும்போது ஆண்ட்ராய்டு மொபைல் பயன்படுத்தும் மாணவ மாணவிகள் அனைவரும் தேவை இல்லாத அதை பதிவிறக்கம் செய்துகொண்டு அதில் தங்கள்  ஐடியை கொடுத்து வைத்திருப்பதனால் வெளிநாடுகளில் இருந்து சில குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கு நம்மளை பயன்படுத்த பயன்படும் அதனால் மாணவிகள் மாணவர்கள் தேவையில்லாத ஆஃப்களை அதை பதிவிறக்கம் செய்யாமல் இருப்பது மிகவும் நல்லது என்று கூறினார்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...