ஷ்யாம் நியூஸ் 31.05.2020 தூத்துக்குடியில் நாளை முதல் பஸ்கள் இயக்க தயாராக உள்ளது! தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கு சில தளர்வவுகளை அறிவித்துள்ளார்.தமிழகத்தில் பஸ் போக்குவரத்தை ஆறு மண்டலங்களாக பிரித்து பஸ் போக்குவரத்திற்கு அனுமதி அளித்தது ள்ளார்.இதன் அடிப்படையில் தூத்துக்குடி திருநெல்வேலி கன்னியாகுமரி தென்காசி மாவட்டங்கள் ஒரே போக்குவரத்து மண்டலமாக அறிவித்துள்ளார் இந்த நான்கு மாவட்டங்களில் இந்த மாவட்டங்களை சார்ந்தவர்கள் எங்கு வேண்டுமானாலும் பஸ்ஸில் சென்று வரலாம் .மற்ற மண்டலங்களில் உள்ள மாவட்டங்களுக்கு செல்ல இ பாஸ் எடுத்துதான் செல்லமுடியும்.தூத்துகுடியில் பஸ் போக்குவரத்து குறித்து அரசு அதிகாரிகளிடம் கேட்டபோது இந்த மண்டலத்தில் இயக்கப்படும் மொத்த பஸ்களில் 50% அரசு பஸ்கள் இயக்க தயாராக உள்ளது.ஒரு பஸ்ஸில் 60% பயணிகள் மட்டுமே பயணிக்க முடியும் அதாவது ஒரு பஸ்ஸில் 35 பயணிகள் மட்டுமே பயணிக்க முடியும்.பயணிகள் முக கவசம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும் .பஸ் ஓட்டுனர் நடத்துனர் ஆகியோரும் நோய்த்தடுப்பு பாதுகாப்புட...