SHYAM NEWS
13.11.2025
பொன் ராதாகிருஷ்ணனுக்கு தூத்துக்குடி காங்கிரஸ் கமிட்டி தலைவர் முரளிதரன் கண்டனம்,
தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் முரளிதரன் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது டெல்லியில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு காங்கிரஸ் கட்சிக்கு என்ன ரோல்? ராகுல் காந்திக்கு என்ன ரோல்? என்று பொன் ராதாகிருஷ்ணன் கேள்வி கேட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது தரம் தாழ்ந்த அரசியலுக்கு இது வழி வகுக்கிறது. நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து ஒன்றிய மோடி தலைமையிலான அரசு மக்களுக்கு எதிராக இந்தியாவில் என்னென்ன தவறுகளை செய்து கொண்டிருக்கிறது. அதானிக்கும், அம்பானிக்கும் என்னென்ன உதவிகளை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்தியா தொடர்ந்து ஏழை நாடாக இருந்து கொண்டிருப்பது ஏன்? பணக்காரர்கள் மட்டும் தொடர்ந்து மேலும் மேலும் பணக்காரர்களாக உருவாகுவது எப்படி? என்பதை நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும், கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கின்றார். இதை பொறுத்துக் கொள்ள முடியாத பாஜகவினர் ராகுல்காந்தியை ஏதாவது ஒரு வலையில் சிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, இன்று குண்டு வெடிப்புக்கு காரணம் காங்கிரஸ் கட்சியும் ராகுல் காந்தியும் தான் என்பது சொல்வது போல் தெரிகிறது. இது ராகுல் காந்திக்கு எதிராக பாஜகவினர் ஏதோ திட்டமிட்ட சதியை உருவாக்குவது போல் தெரிகிறது. டெல்லியில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் பலியான மக்களுக்கு உலகமே அனுதாபம் தெரிவித்து, தீவிரவாதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொண்டிருக்கின்ற நேரத்தில், ஏதோ ஒரு வன்ம நோக்கத்தோடு இதை திசை திருப்ப வேண்டும் என்ற எண்ணத்தில் காங்கிரஸ் கட்சியையும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்களையும் களங்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்து இருக்கிறார். இந்த பொய்யான கருத்தை கூறிய பொன் ராதாகிருஷ்ணன் இதை நிரூபிக்க வேண்டும். இல்லையேல் அவருக்கு எதிராக தூத்துக்குடி நீதிமன்றத்தில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் வழக்கு தொடரப்படும். மேலும் தூத்துக்குடிக்கு பொன் ராதாகிருஷ்ணன் வருகை தரும் போது அவருக்கு எதிராக மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமையில் கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடத்துவோம். என்று வௌியிட்டுள்ள அறிக்கையில் தொிவித்துள்ளாா்.