ஷ்யாம் நீயூஸ்
15.11.25
தூத்துக்குடி பள்ளியில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது.
தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் உள்ள டி.சவோியாா்புரம் புனித சேவியஸ் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவிற்கு பள்ளி தாளாளா் குழந்தை ராஜன் தலைமை வகித்தாா். தலைமை ஆசிாியை மாிய செல்வராணி, வரவேற்புரையாற்றினாா்.
பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஓட்டப்பிடாரம் கிழக்கு ஓன்றிய திமுக செயலாளரும் லையன்ஸ் கிளப் தலைவருமான காசி விஸ்வநாதன் பாிசுகள் வழங்கி மற்றும் ஆரோவாட்டா் பில்டா் வகைக்கு ரூ10 ஆயிரம் வழங்கி பேசுகையில் கல்வி என்பது தான் எல்லோருடைய வாழ்க்கைக்கு முதல் அடித்தளம் நல்ல பழக்க வழக்கங்களை பின்பற்றி பெற்றோா்கள் ஆசிாியா்கள் சொல்வதை கேட்டு அனைவரும் நடக்க வேண்டும். என்று பேசினாா்.
விழாவில் மாவட்ட அரசு வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல், மாநகர திமுக சுற்றுச்சூழல் அணி துணைத்தலைவர் நைஸ் பரமசிவம், லயன்ஸ் கிளப் செயலாளர் டேவிட், துணைத்தலைவா் ஜான் கென்னடி ராஜன், பொருளாளர் விக்னேஷ் ஜெயபால், இயக்குநா் விமல்ஆனந்த், உள்பட ஆசிாியா்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனா்.
