ஷ்யாம் நீயூஸ்
19.11.25
அரசின் அவுட் ஆப் கண்ட்ரோலில் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? கொடிகட்டி பறக்கும் ஊழல்!
கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக" என்பது திருக்குறள். இதன் பொருள்ருள், கற்க வேண்டிய நூல்களை எந்தக் குறையும் இல்லாமல் கற்க வேண்டும், அப்படி கற்ற பிறகு, அந்த கல்விக்குத் தகுந்தபடி வாழ வேண்டும் என்பதாகும்.
ஆனால் இன்று அப்படி இல்லை அத்தி பூத்தாற் போல் ஒரு சிலரை தவிர ஐஏஎஸ் போன்ற உயர் படிப்பு படித்து பணிக்கு வந்தாலும் குறுகிய காலத்தில் எவ்வளவு சம்பாதிக்கலாம் என்பதுதான் நோக்கமாக பலருக்கு உள்ளது.
தூத்துக்குடி கூடுதல் ஆட்சியராக (பொறுப்பு) டி ஆர் டி ஏ ஐஸ்வர்யா IAS பணிபுரிந்து வருகிறார். இவர் துறையின் கீழ் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது இதை தடுத்து நிறுத்த வேண்டிய இவர் தான் பணியில் சிறந்ததாக பணிபுரிவதாக படம் எடுத்து சமூக வலைதளங்கள் பதிவிட்டு தன்னை நேர்மையானவர் என்று காட்டிக் கொண்டு வருகிறார். ஆனால் இவர் கீழ் உள்ள துறையான ஊராட்சி ஒன்றியம் பஞ்சாயத்து என அனைத்து துறைகளிலும் தற்போது மலை போல் ஊழல் மலிந்து ஊழலுக்கே மதிப்பில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது என பரவலாக பேசத் தொடங்கியுள்ளனர்.
உதாரணமாக தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பஞ்சாயத்தின் மூலம் நடைபெறும் பணிகளுக்கு ஆன்லைன் டெண்டர் மூலம் பணிகளை விடாமல் ஆஃப்லைன் மூலம் பணிகள் விட்டு தங்கள் வேண்டியவர்களுக்கும் அதிக கமிஷன் தருபவர்களுக்கு பணி கொடுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மற்றும் ஆஃப்லைன் டென்டரில் பெருந்தொகை வேலையாக இருந்தாலும் அதை பிரித்து சிறு சிறு ஒப்பந்தங்களாக பிரித்து அங்கு பணிபுரியும் பஞ்சாயத்து செயலர்களின் மனைவி பெயரிலும் மற்றும் உறவினர்கள் பெயரிலும் டெண்டர்கள் எடுத்து வேலை நடைபெறுவதால் பணிகள் முடித்தும் முடியாமலும் முழு பில்லும் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவ்வாறு எடுக்கப்பட்டு வரும் பணத்தில் பி டி ஓ பானு உட்பட கூடுதல் உயர் அதிகாரியின் தந்தை வரை ஊழல் பணம் கைமாறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உட்பட்ட கோரம்பள்ளம் பஞ்சாயத்தில் ஆவணங்கள் எதுவும் இல்லாமல் பழுது பார்ப்பு வீடுகள் பழுது பார்க்காமலேயே உறவினர்கள் பலருக்கு 1.50 லட்சம் வீதம் பலருக்கு பணம் வங்கிக்கு அனுப்பி அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுத்தி தனது சுயநலத்துக்காக பணத்தை திருடுவதற்கு சமமான வேலையை செய்துள்ளார் பி டி ஓ ஹை கோர்ட் மகாராஜா என சில ஆதாரங்களை முன்வைத்து குற்றச்சாட்டு வைக்கின்றனர் சமூக ஆர்வலர்கள். ஒரு சில ஆதாரங்கள் நாம் பார்த்த வரை உண்மையாகவே இருந்தது.
கீழ தட்டாப்பாறை ஊராட்சி செயலாளராக பணியாற்றி வரும் இம்மானுவேல் உமரி கோட்டை ஊராட்சி செயலர் கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரும் 21 ஊராட்சிகளிலும் அவர்களது உறவினர்கள் பெயரில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கனிமவள நிதி' உபரி நிதி' மற்றும் ஊராட்சி நிதி சார்ந்த பணிகளை ஊராட்சி செயலர் இமானுவேல் அவரது மனைவி அனுஷா பெயரிலும் உமரிக்கொட்டை ஊராட்சி செயலர் அவரது தம்பி பெயரிலும் ஆஃப்லைன் டெண்டர் வைத்து மொத்த பணியும் நடைபெறுவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு உட்பட்ட 21 கிராம பஞ்சாயத்துகளிலும் இவர்களும் இவர்களின் பினாமிகளின் பெயரிலும் ஆஃப்லைன் டெண்டர் வைத்து பணிகள் நடைபெற்று வருவதாகவும் பணிகள் முழுமையாக முடிவடைவதற்கு முன்பே பணம் எடுக்கப்பட்டு விடுவதாகவும் அதற்கு உடந்தையாக வட்டார வளர்ச்சி அலுவலர் பானு செயல் படுவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது .தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை தவிர அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் ஊழல் கமிஷன் அதிகாரிகள் வாங்கி வந்தாலும் ஆன்லைன் டென்டெண்டரே பின்பற்றப்படுகிறது. ஆனால் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மட்டும் புறம்பாக ஆஃப்லைன் டெண்டர் செயல்படுத்தி வேலையின் மதிப்பு தன்மையை பொறுத்து நிதியை பகிர்ந்து இரண்டு லட்சம் இரண்டு லட்சமாக பணிகளைப் பிரித்து பல கோடிகள் ஊழல் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இவற்றை வட்டார வளர்ச்சி அலுவலர் பானு தெரிந்தே செயல்படுத்துவதாகவும். அவற்றை கண்காணிக்க வேண்டிய கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். பஞ்சாயத்து தலைவர்கள் இல்லாததால் தனி அலுவலர்கள் அதிகாரத்தை பயன்படுத்தி பஞ்சாயத்து தேர்தல் நடைபெறும் முன் தங்களால் எவ்வளவு சுருட்ட முடியுமோ அவ்வளவு சுருட்டி கொள்ளலாம் என்று கூட்டு சேர்ந்து வேலைகள் தரம் இல்லாமல் நடைபெறுவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இது போன்ற தவறுகளுக்கு உடன்படாத நேர்மையான அதிகாரிகளை தவறான தகவல்களை சொல்லியும் தவறாக புகார் கொடுத்து இடம் மாற்றம் செய்து வருகின்றனர் என்றும் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இதுகுறித்து பஞ்சாயத்து செயலர் இம்மானுவேலிடம் கேட்டபோது ஆம் தனது மனைவி அவரது பெயரில் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் ஆப்லைன் டெண்டர் எடுத்து பணி செய்து வருவதாக ஒத்துக் கொண்டார். கிருஷ்ணமூர்த்தி இடம் கேட்டபோது தன் தம்பிபெயரில் டெண்டர் எடுக்கவில்லை என்றும் மேற்படி அது பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது என்றும் தெரிவித்தார். 17 11 2025 அன்று கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யாரிடம் இது சம்பந்தமாக கேட்ட பொழுது பொதுமக்களை புகார் கொடுக்கச் சொல்லுங்கள் அதற்கான பதில் நாங்கள் சப்மிட் பண்ணுகிறோம் என்று கூறி நடையை கட்டினார்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கையில் ஊழலுக்கு பொதுமக்கள் மனு கொடுக்க வேண்டும் என்பது வேடிக்கையாக உள்ளது என்றும் நாடே ஊழலில் தலை விரித்து ஆடும் போது யாரிடம் கேட்டும் ஒன்று நடக்கப் போவதில்லை என்றும். பொதுமக்களுக்கு செய்ய வேண்டிய பணிகளை திறம்பட செய்வதற்காக அரசு உயர் அதிகாரிகளை நியமித்து கை நிறைய சம்பளம், பங்களா, கார், கார் ஓட்டுநர் , உதவி செய்வதற்கு அலுவலக உதவியாளர்கள் என பல வசதி வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தாலும் அதையும் தாண்டி அதிகாரிகளுக்கு பெரும் தேவை இருப்பதாகவே பார்க்கப்படுகிறது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் அரசின் அவுட் ஆஃப் கண்ட்ரோலில் உள்ளதாகவே தெரிகிறது அதனால்தான் இதுவரை ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாமலே நீண்டு கொண்டே போகிறது என்று கூறுகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி பிடிஓ ஐகோர்ட் மகாராஜா ஊழல் செய்திக்காக கொலை மிரட்டல் விடுத்தது குறிப்பிடத்தக்கது.
