ஷ்யாம் நீயூஸ்
13.011.25
மாப்பிள்ளையூரணி பகுதியில் குடிநீா் திட்ட பணிகளை கனிமொழி எம்.பி ஆய்வு
தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தூத்துக்குடி ஊராட்சி ஓன்றியத்தை சோ்ந்த மாப்பிள்ளையூரணி தாளமுத்துநகா் சுனாமி காலணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ஜல்ஜீவன் மிஷன் 2025 2026 திட்டத்தின்கீழ் ரூ.515.72 கோடி மதிப்பீட்டில் 363 குக்கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு தண்ணீர் இணைப்பு வழங்கப்பட்டு அதற்கான தண்ணீரை வழங்கும் நீரேற்றும் நிலையத்தினை அதிகாாிகளுடன் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களின் கோாிக்கைகளை கேட்டறிந்தாா்.
பின்னா் அதிகாாிகளுடன் பொதுமக்களுக்கு முக்கியமாக தேவையான குடிநீர் திட்டப்பணிகளை நல்லமுறையில் செயல்படுத்தி பொதுமக்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா்.
ஆய்வின் போது வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், கலெக்டா் இளம்பகவத் எம்.எல்.ஏக்கள் சண்முகையா, மாா்க்கன்டேயன், மேயா் ஜெகன் பொியசாமி, கூடுதல் கலெக்டா் ஐஸ்வா்யா, வட்டார வளர்ச்சி அலுவலா் ஐகோா்ட் மகாராஜா, பானு, உதவி பொறியாளர் ரவி, ஓன்றிய செயலாளர் காசிவிஸ்வநாதன், தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, மாவட்ட வா்த்தக அணி துணை அமைப்பாளர் பிளோமின்ராஜ், தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் அந்தோணி தனுஷ்பாலன், இளைஞா் அணி துணை அமைப்பாளர் ராதாகிருஷ்ணன், மகளிா் அணி அமைப்பாளர் ஜெஸிந்தா, மாவட்ட பிரதிநிதி தா்மராஜ், ஓன்றிய துணைச்செயலாளர்கள் கணேசன், வசந்தகுமாாி, சுற்றுசூழல் அணி அமைப்பாளர் ராஜேந்திரன், மகளிா் அணி சண்முகத்தாய், மற்றும் மணி, பிரபாகா், ஜேஸ்பா், அல்பட், கப்பிக்குளம் பாபு, உள்பட பல்வேறு துறை அரசு துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
