ஷ்யாம் நீயூஸ்
24.03.2023
தூத்துக்குடியில் மேடை பேச்சு திறன் பயிற்சி நடைபெற்றது.
தூத்துக்குடி ஜேசிஐ பியர்ல் சிட்டி குயின் பீஸ் சார்பில் நடைபெற்ற மேடை பேச்சு திறன் பயிற்சியில் ஜேசி ஜெயக்குமார் முதன்மை ஆசிரியராகவும், கணேஷ் ராம்சுந்தர் இணை ஆசிரியராகவும் பணியாற்றினர். ஜேசிஐ தலைவர் வக்கீல் சுபாசினி வரவேற்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் மண்டல ஆசிரியை சுப்புலட்சுமி, மண்டல ஒருங்கிணைப்பாளர் முத்துராமலிங்கம், பட்டயத் தலைவர் ஜெர்லின் தினகரன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்கள். மண்டல அலுவலர் வளத்துறை வில்சன் அமிர்தராஜ், பியர்ல்; சிட்டி தலைவர் ராஜேஷ், செயலாளர் சுப்பிரமணியன், மற்றும் பொன்ராஜா, முகமது இப்ராகிம், ஜனார்த்தனன், ஆகியோர் கலந்து கொண்டனர்.
பயிற்சியில் திட்ட இயக்குநர் சரண்யா, துணைத் தலைவர் மேலாண்மை மதுமிதா, பொருளாளர் முத்து லட்சுமி, துணைத் தலைவர் ரத்தினா பொன்ராஜா, இயக்குநர் வணிகம் சத்யா மற்றும் சங்கரி ஆகியோர் பங்கேற்றனர்.
பயிற்சிக்கான ஏற்பாடுகளை செயலாளர் ஆயிஷா இப்ராஹிம், துணைத் தலைவர் அஜிதா பிரபு ஆகியோர் செய்திருந்தனர்.
மூன்று சிறந்த பங்கேற்பாளர்கள் விருதும், இரண்டு சிறந்த பயிற்சி உருமாற்ற விருதுகளும் வழங்கப்பட்டன. தனியார் நிறுவனங்களின் நிறுவன ஊழியர்கள் பங்கேற்றனர்.