வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் தூத்துக்குடி வழக்கறிஞர் சங்கத் தலைவர் செங்குட்டுவன் அரசுக்கு கோரிக்கை!
ஷ்யாம் நீயூஸ்
03.03.2023
வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் தூத்துக்குடி வழக்கறிஞர் சங்கத் தலைவர் செங்குட்டுவன் அரசுக்கு கோரிக்கை
தூத்துக்குடி வழக்கறிஞர் பி கே முத்துகுமார் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து முக்கிய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என வழக்கறிஞர்கள் நீதிமன்றம் அருகே உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தவர் பி கே முத்துகுமார் இவரை கடந்த 22.02.2023 அன்று கோரம்பள்ளம் சோரீஸ்புரத்தில் வைத்து ஒரு கும்பல் அரிவாள் கத்திகளால் தாக்கி படு பயங்கரமாக படுகொலை செய்தனர். படுகொலை செய்த குற்றவாளிகள் என சிலர் நீதிமன்றத்தில் ஆஜர் ஆனாலும் முக்கிய குற்றவாளிகளை காவல்துறை இன்னும் கைது செய்யவில்லை என்று தூத்துக்குடி வழக்கறிஞர்கள் குற்ற சாட்டி வந்தனர். இந்த நிலையில் முக்கியமான குற்றவாளிகளை விரைந்து கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும் வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட வழக்கறிஞர் சங்கம் தலைவர் செங்குட்டுவன் கூறுகையில் வழக்கறிஞர் பி கே முத்துக்குமார் படுகொலை செய்தது மிகவும் கண்டனத்துக்குரியது. குற்றவாளிகள் சிலர் நீதிமன்றத்தில் சரண்டர் ஆனாலும் முக்கியமான குற்றவாளிகளை கைது செய்யாமல் காவல்துறையினர் மெத்தனமாக செயல்பட்டு வருகின்றனர் விரைவில் முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என்றும் படுகொலை செய்யப்பட்ட முத்துக்குமார் ஆங்கில புலமையுள்ள மிகத் திறமை வாய்ந்த வழக்கறிஞர் என்றும் வழக்கறிஞர்களுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை இருந்து வருவதாகவும் வழக்கறிஞர்களை பாதுகாக்கும் சட்டம் தமிழக அரசு ஏற்ற வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் வழக்கறிஞர் சங்க துணை தலைவர் செல்வின் மச்சோடா செயலாளர் மார்க் இணை செயலாளர் ரமேஷ் பொருளாளர் ராஜா ஒழுங்கு நடவடிக்கை உறுப்பினர் குழு மணிகண்டன் ராஜா, ஜவகர், சுப்பிரமணிய ஆதித்தன், அதிசயகுமார் ,சுப மாடசாமி, சிவராஜ் , பழனிவேல்ராஜ் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்