தூத்துக்குடியில் விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற காவல்துறை வாகனம்! பாதிக்கப்பட்டவர் எஸ்பியிடம் புகார் கொடுக்க முடிவு!
ஷ்யாம் நீயூஸ்
23.03.2023
தூத்துக்குடியில் விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற காவல்துறை வாகனம்! பாதிக்கப்பட்டவர் எஸ்பியிடம் புகார் கொடுக்க முடிவு!
தூத்துக்குடியில் இருந்து மில்லர்புரம் சென்று கொண்டிருந்த இரு இருசக்கர வாகனத்தின் மீது தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்தில் உள்ளிருந்து வந்த டாடா சுமோ காவல் துறை வாகனம் மோதியதில் ஒருவர் காயமடைந்தார்.
தூத்துக்குடி மில்லர்புரம் பாரதி நகரை சேர்ந்தவர் முருகேசன்( 61) த/பெ முனியசாமி நாடார் இவர் தூத்துக்குடி நகரில் இருந்து மில்லர்புரம் சென்று கொண்டிருந்தபோது நீதிமன்ற வளாகத்தின் உள்ளிருந்து மாலை 4.30 மணியளவில் வெளியே வந்த காவல்துறை வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்தார் மற்றும் அவரது செல்போன் சேதம் அடைந்தது. காயம் அடைந்த முருகேசனுக்கு உதவி ஏதும் செய்ய முன்வராமல் மனிதாபிமானமற்ற முறையில் நடுரோட்டில் விட்டுச் சென்றனர் காவல்துறை வாகன ஓட்டுனரும் உடன் இருந்த நீதிமன்ற ஊழியரும். காயம் அடந்த நபர் தானாக எழுந்து அரசு மருத்துவமனையில் சேர்வதற்கு சென்றார். சம்பவ இடத்தில் வைத்து முருகேசன் கூறுகையில் நீதி மற்றும் முன்பு உள்ள பஸ் நிறுத்தம் முன்பு வாகன நெரிசல் இருந்தது வாகனங்கள் சென்று கொண்டிருந்தன அப்போது பஸ் நிறுத்தம் அருகே மெதுவாக வந்து கொண்டிருந்தேன் அப்போது நீதிமன்ற வளாகத்திற்குள் இருந்து வந்த காவல்துறை வாகனம் என் இருசக்கர வாகனம் மோதிவிட்டது இதில் நான் இருசக்கர வாகனத்துடன் கீழே விழுந்ததில் காலில் காயம் ஏற்பட்டது. கவன குறைவாக என்மீது மோதிவிட்டதோடு இல்லாமல் உதவி கூட செய்ய மனம் இல்லாமல் என்னை மிரட்டி விட்டு சென்று விட்டனர் என்றும். இது குறித்து தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்க போவதாகவும் தெரிவித்தார்.