மாப்பிள்ளையூரணி ஊராட்சி முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் முழுமையாக வளர்ச்சியடையும்! கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் பேசினார்.
ஷ்யாம் நீயூஸ்
22.03.2023
மாப்பிள்ளையூரணி ஊராட்சி முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் முழுமையாக வளர்ச்சியடையும்! கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் பேசினார்.
தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிலுவைப்பட்டி ஆர்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தலைமை தாங்கினார்.
கிராமசபையில் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் சங்கரன், விடுதலை சிறுத்தை குமார், பிஜேபி சத்தியராஜ், மகளிர் கூட்டமைப்பு தலைவர் அந்தோணி பிரேமா, சமூக ஆர்வலர் சசிகுமார், திருநங்கைகள் உள்ளிட்ட பொதுமக்கள் பலர் பேசுகையில் மாப்பிள்ளையூரணி பகுதியில் பல பொது இடங்களில் குப்பைகள் தேங்காதவாறு ஊராட்சி மன்றத்திலிருந்து எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும். சாலை கழிவுநீர் கால்வாய் மின்விளக்கு சுகாதாரம் அனைவருக்கும் குடிதண்ணீர் இணைப்பு இலவச வீட்டுமனை பட்டா புதிய ரேஷன்கார்டுகள் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கி மூலம் கடன் உதவிகள் போன்றவைகளை செய்து கொடுக்க வேண்டும். சிலோன் காலணி பகுதியை காவல்துறையினர் வேறு பார்வையுடன் பார்க்கும் நிலை மாற வேண்டும். கலெக்டரிடம் மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதிக்கு கூடுதலாக குடிதண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதற்கு பதிலுரை வழங்கி விளக்கம் அளித்து செய்து கொடுப்பதாக உறுதியளித்தனர்.
இதனையடுத்து ஊராட்சி மன்ற தலைவரும் திமுக தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளருமான சரவணக்குமார் பேசுகையில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான முக.ஸ்டாலின் அறிவுரையின் படி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் வழிகாட்டுதலின் படி இந்த கிராமசபை கூட்டம் நடைபெறுகிறது. கடந்த காலங்களில் கிராமசபை கூட்டம் நடைபெறாமல் இருந்தன. திமுக ஆட்சி வந்த பிறகு முதலமைச்சர் உத்தரவுபடி முறையாக கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட்டு உங்களுடைய ஆலோசனைகளை கோரிக்கைகளை தீர்மானமாக நிறைவேற்றி அரசு கவனத்திற்கு எடுத்து சென்று சில பணிகளை அமைச்சர் எம்.பி எல்எல்.ஏ கலெக்டர் என பலருக்கும் கொண்டு சேர்த்து மாப்பிள்ளையூரணி பகுதி மக்களின் நலன் கருதி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு முன்பு இந்த ஊராட்;சி எந்த நிலையில் இருந்தது தற்போது மக்கள் தொகை மற்றும் கிராமங்கள் புதிதாக அதிக அளவில் வந்துள்ளன, இதையெல்லாம் கருத்தில் கொண்டு அடிப்படை பணிகள் அனைத்து பகுதி மக்களுக்கும் முழுமையாக கிடைக்க வேண்டும் என்று செயல்பட்டு வருகிறோம் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்றுள்ளதை அனைவரும் அறிவீர்கள் தொடர்ந்து இந்த பகுதி முழுமையான வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியில் எல்லா பணிகளும் நல்ல முறையில் நடைபெறும் என்று பேசினார். பல்வேறு பொதுமக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
கூட்டத்தில் உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருளை பற்றி விவாதித்தல், கிராம ஊராட்சி பொது நிதி செலவீனம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை சுத்தமான குடிநீர் வினியோகத்திற்கான உறுதி செய்வது குறித்து விவாதித்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கிராம வளர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம் )சுகாதாரம், ஜல் ஜீவன் திட்டம், இந்த பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 528 குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் திருநங்கைகள் உள்ளிட்ட இப்பகுதியை சேர்ந்த பலருக்கும் குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பது, மற்றும் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் மாப்பிள்ளையூரணி கூட்டுறவு கடன்சங்க செயலாளர் பாலமுருகன், மின்வாரிய இன்ஸ்பெக்டர் வெள்ளத்துரை, அதிகாரிகள் ரெங்கதுரை, வாசு, மாப்பிள்ளையூரணி ஆரம்பசுகாதார நிலைய அலுவலர் முகம்மது ஆசீப், கூட்டுறவு ரேஷன்கடை அலுவலர் பிரபாகர், தூத்துக்குடி ஊராட்;சி ஒன்றிய பொதுப்பணித்துறை கட்டிட மேற்பார்வையாளர் முத்துராமன், ஒன்றிய கவுன்சிலர் தொம்மை சேவியர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கபாண்டி, தங்கமாரிமுத்து, ஜேசுராஜா, பாலம்மாள், ஸ்டாலின், தாளமுத்துநகர் சப்இன்;ஸ்பெக்டர் முத்தையா, தனிப்பிரிவு ஏட்டு முருகேசன், கிராமநிர்வாக அலுவலர் அமலநாதன், தெற்கு மாவட்ட திமுக மகளிர் அணி துணை அமைப்பாளர் ஆரோக்கிய மேரி, முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார், மற்றும் கௌதம், சுகாதர பணியாளர்கள் அங்கன்வாடி பணியாளர்கள் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஊராட்சி மன்ற செயலாளர் ஜெயக்குமார் நன்றியுரையாற்றினார்.
.