பூத்து கமிட்டியை வைத்து புரட்சி பண்ண முடியாது தூத்துக்குடியில் மேடையில் வைத்து சசிகலா புஷ்பாவிற்கு டோஸ் விட்ட அண்ணாமலை!
ஷ்யாம் நீயூஸ்
25.03.2023
பூத்து கமிட்டியை வைத்து புரட்சி பண்ண முடியாது! தூத்துக்குடியில் மேடையில் வைத்து சசிகலா புஷ்பாவிற்கு டோஸ் விட்ட அண்ணாமலை!
பாரதிய ஜனதா கட்சி செயல்வீரர்கள் கூட்டம் தூத்துக்குடி அபிராமி மஹாலில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்
தொடக்கத்தில் பேசிய மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா தூத்துக்குடி மாவட்டத்தில் 80 சதவீத பூத்து கமிட்டிகள் நியமிக்கப்பட்டு விட்டதாகவும் அண்ணாமலையை தமிழகத்தின் முதல்வராக ஆக்கி விடுவதாகவும் அதற்கான வேலைகள் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டு பேசினார் பின்னர் பேசிய மாநில தலைவர் அண்ணாமலை 30 ஆண்டுகளாக தமிழகத்தில் கூண்டுக்குள் அடைப்பட்ட கிளியாக இருக்கும் பாஜக இனி தனியாக பரப்பதற்கான நேரம் வந்துவிட்டது தமிழகத்தில் அதற்கான தளம் அமைந்துவிட்டது பாரதப் பிரதமரின் திட்டத்தை தமிழ்நாட்டு மக்களின் மத்தியில் எடுத்துக் கூறி மக்களிடம் வாக்கு கேட்க வேண்டும் தவிர பூத் கமிட்டி அமைத்து விட்டதால் மட்டுமே மக்கள் வாக்களித்து விடுவார்கள் என்று நான் எண்ணவில்லை. ஆகவே களத்தில் இறங்கி வீதி வீதியாக தெருப் பிரச்சாரம் தின்னைப் பிரச்சாரம் செய்தால் மட்டுமே நாம் தூத்துக்குடியில் இருந்து பாராளுமன்ற தொகுதிக்கு தூத்துக்குடியில் இருந்து ஒரு எம்பி அனுப்ப முடியும் ஆகவே அதற்கான வேலையை களத்தில் இறங்கி செய்ய வேண்டும் அதற்கான அடித்தளத்தை அமைத்து செயல்பட வேண்டும் பூத் கமிட்டி அமைத்து விட்டதால் மட்டுமே மக்கள் தானாக வந்து வாக்களித்து விடுவார்கள் என்று எண்ணக்கூடாது எம்பது சதவீத பூத் கமிட்டி அமைத்து விட்டால் புரட்சி வந்து விடும் என்று நான் நம்பவில்லை காங்கிரஸ் கட்சியின் சார்பாக முதல்வராக இருந்த காமராஜர் தண்ணீருக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தாரோ அதுபோல் நமது பாரத பிரதமர் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வீட்டுக்கும் வீதி வீதியாக மூளைக்கு மூளை வீட்டு வாசலில் குடிநீர் பைப் அமைத்துக் கொடுத்துள்ளார்.அது போன்ற சாதனைகளை மக்களிடம் சொல்லி வாக்குகள் சேகரித்து புரட்சியே ஏற்படுத்த வேண்டும் ஓட்டுக்கு பணம் கொடுத்து ஓட்டு வாங்கியது முதன் முதலில் தூத்துக்குடியில் தான் கிழக்கு இந்த கம்பெனிக்கு எதிராக கப்பல் விட்ட வ உ சி சிதம்பரம் பிள்ளையை கிழக்கு இந்திய கம்பெனிகள் வணிகம் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு கொடை இலவசமாக கொடுத்து வ உ சி சிதம்பரம் பிள்ளை சுதேசிய கப்பலுக்கு பணிகள் செய்ய இடைஞ்சல் கொடுத்து பொருளாதார வீழ்ச்சி அடைய வைத்தனர் மற்றும் அவரை செக்கு இழுக்க வைத்தனர் இலவசம் என்பது நமக்கு கொடுக்கும் ஏமாற்று வேலை. இன்னும் நாடாளுமன்ற தேர்தலுக்கு 13 மாதங்களே உள்ளன. மக்கள் முன்னால் சென்று பாரத பிரதமரின் திட்டங்களை எடுத்துகூறி ஓட்டு கேளுங்கள் தெருமுனைப் பிரச்சாரம் திண்ணைப் பிரச்சாரம் வீதி பிரச்சாரம் தெரு பிரச்சாரம் செய்து தமிழகத்தில் பாஜகவின் அடித்தளத்தை உறுதிப்படுத்த வேண்டும். பாலும் தண்ணியும் கலந்து இருந்தால் பால் எது தண்ணீர் எது என்று தெரியாது அது போல்தான் நாமும் தனித்துவமாக செயல்பட வேண்டும் என்றும் பேசினார் மேடையில் வ உ சிதம்பரம் பிள்ளை எடுத்துக்காட்டாக பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சுதந்திர போராட்ட வீரர்களின் புகைப்படத்திற்கு மாலையிட்டு மரியாதை செய்தபோது வ உ சிதம்பரம் பிள்ளை படம் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .தூத்துக்குடி மாவட்ட பாஜக நிர்வாகிகள் சரியாக செயல்படாததால் களத்தில் இறங்கி செயல்பட வைக்க வேண்டும் என்று தூத்துக்குடியில் நடந்த பாஜக செயல் வீரர்கள் கூட்டத்தில் அண்ணாமலை சாட்டையை சுழற்றி உள்ளார் என பேசப்பட்டு வருகிறது. மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் பாஜகவின் ஆக்டிங் தலைவர்கள் பெயரை மேடையில் உச்சரிக்கவில்லை என்பதும் வருத்தம் அளிக்கிறது என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.