ஷ்யாம் நியூஸ்
31.05.2021
தூத்துக்குடி தனிப்படை போலீஸ் தாக்கியதில் பள்ளி மாணவன் மருத்துவமனையில் அனுமதி.
தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் பகுதியைச் சார்ந்த சதீஷ் என்ற லட்சுமணன் இவரது தகப்பனார் ராஜசேகர் டிரைவராக பணியாற்றி வருகிறார் சதீஷ் விளாத்திகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகிறார் தூத்துக்குடி கேடிசி நகரில் உள்ள சதீஷ் மச்சான் வீட்டிற்கு கடந்த வாரம் வந்து உள்ளார் இந்நிலையில் இன்று மதியம் சதீஷ் மச்சான் ராஜா எங்கே உள்ளார் என்று தனிப்பிரிவு போலீசார் இரண்டு பேர் அவரிடம் விசாரணை செய்துள்ளனர் ராஜா எங்கு சென்றுள்ளார் என்று தனக்கு தெரியாது என்று சதீஷ் தெரிவிக்கவும் ஆத்திரத்தில் தனிப்பிரிவு போலீசார் 2 பேரும் பள்ளி மாணவனை தாக்கியதாக கூறப்படுகிறது இந்நிலையில் சதீஷ் என்ற லட்சுமணன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் பிளஸ் டூ மாணவனை தனிப்பிரிவு போலீசார் தாக்கிய சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.