ஷ்யாம் நியூஸ்
11.05.2021
தூத்துக்குடி டாஸ்மாக் கடை இரவு 9.30 வரை திறந்து இருந்ததால் சர்ச்சை !
கொரானா தொற்று பரவலை தடுக்க தமிழக அரசு கடந்த 09.05.2021 மலை 6 மணி வரை மட்டுமே இயங்க டாஸ்மாக் கடைக்கு அனுமதி அளித்திருந்தது .அதை தொடர்ந்து டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் மாலை 6 மணிக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதை கடையின் மேற்பார்வையாளர்கள் மாவட்ட மேலாளர்களிடம் உறுதி செய்துகொள்ளவேண்டும் என சுற்றறிக்கை அனுப்ப பட்டது .
தூத்துக்குடி மாவட்டம் கல்லுரிநகர் கடை எண் 10145 கடை மட்டும் இரவு 9.30 மணிவரை திறந்து இருந்ததாக அந்த பகுதி லாரி ஓட்டுனர்கள் தெரிவித்தனர் .இதனை தொடர்ந்து மது பிரியர்கள் மதுவங்க ஈசல்கள் போன்று வரிசையாக வர தொடங்கினர் .ஆனால் கடை திறந்து இருந்தது உண்மை தான் என்றாலும் கடையில் மின்சாரம் இல்லாததால் கடை முன்பு தெருவிலகிற்கு செல்லும் மின் கம்பியில் மின் வாரிய அதிகாரியிடம் அனுமதி பெறாமல் இருட்டில் திருட்டு மின்சாரம் எடுத்து வெல்டிங் அடிக்கும் வேலையே செய்துள்ளனர் என்றும் அப்பகுதி லாரி ஓட்டுனர்கள் தெரிவித்தனர் இதனால் அங்கு கூடிய கூட்டத்தால் அங்கு சிறிதுநேரம் சர்ச்சை ஏற்பட்டுள்ளது . இந்த கடைக்கு முறையாக கடை மேற்பார்வையாளர் மேற்பார்வை செய்யாமல் மின் கட்டணம் கட்டாமல் கவன குறைவாக இருந்துள்ளார் என்றும் இதனால் மின்சாரவாரியம் சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பே மின் இணைப்பை துண்டித்துள்ளது என தெரிய வருகிறது .இந்த சம்பவத்தை உடனடியாக மாவட்ட மேலாளரிடம் தெரிவிக்காமல் இருந்துவிட்டு இந்த சம்பவத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்புதான் மாவட்ட மேலாளரிடம் தெரிவித்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளது .இது பற்றி டாஸ்மாக் மாவட்ட மேலாளரிடம் கேட்டபோது
கடையில் மின்சாரம் இல்லை என்பது உண்மைதான் கடை காவலுக்கு வாட்ச்மென் வைக்க கட்டளையிட்டுளேன் மற்றபடி திருட்டு கரண்ட் எடுத்து வெல்டிங் வைத்தாரா மேற்பார்வையாளர் என்பது பற்றி தெரியவில்லை இது சம்பந்தக விசாரித்து நடவடிக்கை எடுக்கிறேன் என உறுதியளித்தார் .