தூத்துக்குடி அரசு மருத்துவமனை பிரதான பழைய நுழைவு வாயில் மீண்டும் விரைவில் திறப்பு !அமைச்சர் கீதாஜீவன் அதிரடி நடவடிக்கை !
ஷ்யாம் நியூஸ்
25.05.2021
தூத்துக்குடி அரசு மருத்துவமனை பிரதான பழைய நுழைவு வாயில் மீண்டும் விரைவில் திறப்பு !அமைச்சர் கீதாஜீவன் அதிரடி நடவடிக்கை !
தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு நோயாளிகள் வி வி டி சிக்னல் அருகில் உள்ள சாலையில் தற்போது சென்று வருகின்றனர் .பொதுமக்கள் மருத்துவமனைக்கு செல்ல நான்கு பாதை சாலை மற்றும் வி வி டி சிக்னல் அருகில் உள்ள சாலையை கடந்து செல்ல பொதுமக்கள் நீண்ட நாட்களாக சிரமப்பட்டு வருகின்றனர் மற்றும் சிக்னல் விழும் நேரங்களில் நீண்ட வரிசையில் வாகனங்கள் நிற்பதால் ஆம்புலன்ஸ் போன்ற அவசர வாகனங்கள் செல்வதில் சிரமம் இருந்து வருகிறது .மருத்துவமனைக்கு நோயாளிகள் பாதுகாப்பாக சாலையை கடந்து செல்லும் வகையில் மாற்று பாதை இருந்தால் நல்லது என பொதுமக்கள் விரும்பினர் .மக்களின் பாதுகாப்புக்காகவும் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காகவும் சமூக நலன் -மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினருமான கீதாஜீவன் தூத்துக்குடிக்கு கொரானா ஆய்விற்கு வந்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா .சுப்ரமணியத்திடம் மருத்துவனையின் பழைய பிரதான வாசலை திறக்க கோரிக்கை வைத்தார் அதை பார்வையிட்ட பின் அமைச்சர் மா .சுப்ரமணியன் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில் இன்று காலையில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் சென்று தடுப்பூசி போடும் முகாம்களை தொடக்கி வைத்துள்ளேன் நகர்ப்புறம் மட்டும் அல்லாமல் கிராமப்புற மக்களும் ஆர்வத்துடன் தடுப்புசி செலுத்திக்கொள்கின்றனர் 18 வயது முதல் 44 வயதுவரை உள்ளவர்களுக்கு 26000 தடுப்புசிகளும் 45வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 23000 தடுப்புசிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது மற்றும் வார் ரூம் ஒன்றும் திறக்கப்பட உள்ளது . தூத்துக்குடியில் 27 தனியார் மருத்துவமனைகள் காப்பீடு திடத்தில் இணைத்து உள்ளது .அரசு காப்பீடு திட்டத்தில் இணைத்து பொதுமக்கள் அதை பயன்படுத்தி கொள்ளலாம் . பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனை பழைய பிரதான வாயிலை திறக்கவேண்டும் என அமைச்சர்கள் கேட்டுக்கொண்டனர் . அதற்கான நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடமும் மாநகராட்சி ஆணையரிடமும் அறிவுறுத்தப்பட்டுள்ளது விரைவில் மருத்துவமனை பிரதான வாசல் திறக்கப்படும் எனவும் தெரிவித்தார் .ஆய்வின் போது அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷணன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கலெக்டர் செந்தில்ராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், எம்.எல்.ஏக்கள் ஊர்வசி அமிர்தராஜ், மார்க்கண்டேயன், பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெபமணி, உள்பட பலர் கலந்து கொண்டர்.