ஷ்யாம் நியூஸ்
19.05.2021
பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வரவேண்டும் கனிமொழி எம் பி வேண்டுகோள் !தூத்துக்குடி சத்யா மஹாலில் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியளவில் நேற்று கொரானா தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கை தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது .தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தலைமையில் மீன் வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்றது .
அப்போது கனிமொழி கருணாநிதி பேசும்போது தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கொரானா பாதிப்பு ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது .நம்மில் பலருக்கும் கொரனா பாதிப்பிற்கு ஆளாகி உள்ளனர் .நமது உறவினர்கள் நண்பர்கள் என பலரும் இறந்துள்ளனர் தமிழக முதல்வர் மக்களை காக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு போராடி வரும் சூழ்நிலையில் வேறு வழியின்றி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது .கொரானா பரவலை தடுக்க ஒரே வழி நாம் அனைவரும் வீட்டில் இருக்கவேண்டும் கண்டிப்பாக முகக்கவசம் அணியவேண்டும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டுள்ள ஊராட்சி தலைவர்கள் கவுன்சிலர்கள் ,ஊர் பெரியவர்கள் தடுப்பூசி போட்டுகொண்டு மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் .தூத்துக்குடி மாவட்டத்தில் தடுப்பூசி போடுவதற்கு பல்வேறு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது .மக்கள் அனைவரும் கொரானா பதிப்பில் இருந்து காக்க அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார் .இந்த ஆய்வு கூட்டத்தில் ஆட்சி தலைவர் மருத்துவர் செந்திராஜ் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன் வட்டாரவளர்ச்சி அலுவலர் பாலசுப்ரமணியன் ,ஊராட்சி செயலர்கள் தி மு க மத்திய ஒன்றிய செயலாளர் ஜெயக்கொடி மற்றும் தி மு க முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்