முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் டாக்டர் அலட்சியத்தால் பெண் உயிரிழப்பு ?

 ஷ்யாம் நியூஸ் 

21.05.2021

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் டாக்டர்  அலட்சியத்தால்  பெண் உயிரிழப்பு ? 



தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் டாக்டர் அலட்சியத்தால்   பெண் உயிரிழப்பு? கொரானா நோயாளிகளை மருத்துவர்கள் பார்ப்பது இல்லை என  உறவினர்கள்  குற்றச்சாட்டு !

தூத்துக்குடி அறுமுகனேரி பாரதிநகரை சார்ந்தவர்  ராஜாமணி (33) க /பெ செல்வகுமார் இவர் கடந்த 19 ம் தேதி காலை உடல் நிலை சரி இல்லாமல் தூத்துக்குடி அரசு மருத்துவமணயில் சேர்ந்துள்ளார் காலையில் இருந்து மலை 6 மணி வரை மருத்துவர்கள் யாரும் வந்து கவனிக்காததால் இறந்துள்ளார்  என உறவினர் குற்றச்சாட்டு வைக்கின்றனர் . இவருக்கு நான்கு பெண் குழந்தைகள் உள்ளன  இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

தமிழக அரசாங்கம்  கொரனா தடுப்பில் அக்கறை  செலுத்தி  வரும்  நிலையில்  தூத்துக்குடி  அரசு மருத்துவ மனையின் அவலநிலையை பாரீர் என்ற தலைப்பில்  உறவினறை இழந்த தூத்துக்குடி  தீவிர தி மு க  பிரமுகர் தனது மனக்குமுறலை வெளிப்படுத்தி வருகிறார் இவர் முன்னாள் முதல்வர் கலைஞ்சர் கருணாநிதி இறந்தபோது அடக்கம் செய்ய மெரினா கடற்கரையில் இடம் இல்லை  என்று அப்போதைய அரசு சொன்னபோது இரவு முழுவதும் கதறி அழுதது அப்பகுதியில் அப்போது பெரும்  சோகத்தை ஏற்படுத்தியது மற்றும் தி மு க ஆட்சி அமையவேண்டும் என தன்னலம் பாராமல் உழைத்த தி மு க தொண்டன் ஆவார் .அவர் தனது உறவினருக்கு உடல்நிலை சரி இல்லாத காரணத்திற்காக  தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார் .பின்பு அங்கு நடந்த நிகழ்வை அவர் பதிவிட்டுள்ளதையும் நாம் அவருடன் எடுத்த பேட்டியும் மேற்கொண்டு காணலாம் .

நேற்று,காலை,19.05.2021.அன்று காலை எனது 7.மணியளவில் எனது அண்ணன்  மகள் உடல் சாரியில்லாத நிலையில்  தூத்துக்குடி  அரசு மருத்துவமனையில் சேர்த்தோம் அவர்கள்  skinward.ல் வைத்து  வந்தவுடன் நர்ஸ் ஊசிபோட்டார்கள் அனுமதித்த நேரத்தில்  இருந்த காலை 7,மணியில் இருந்து மாலை 6 மணி வரை ஒரு மருத்துவர் கூட வந்து  பார்க்கவில்லை  நான்உடனே நம்முடைய அமைச்சர் கீதாஜீவன் அவர்களை போனில் தொடர்பு கொண்டு  நிலைமையை சொன்னேன் அவர்கள்  ஆவண செய்வதாக சொன்னார்கள்  நம் எம்.பி.கனிமொழி அவர்களின் BA அவர்களை தொடர்பு கொண்டு  உதவிகோரினேன் அவர்களும் உதவி செய்வதாக சொன்னார்கள்  ஆனால்  யார்உதவியும் எடுபடவில்லை  மாலை 6 மணி வரை எந்த மருத்துவரும் வந்து பார்த்து சிகிச்சை அளிக்கவில்லை அதனால்  என் அன்பு மகள் எங்களை விட்டு மாலை 6 அளவில் பிரிந்து விட்டாள் அவளுக்கு  4 சிறுபெண் குழந்தைகள் இருக்கிறார்கள் ..கொரனா நேரத்தில்  அரசாங்கம் வேகமாக  செயல்படுவதாக இருந்தாலும்  தூத்துக்குடி அரசாங்க மருத்துமனை மருத்துவர்களின் அலட்சியத்தால் இன்னும் எத்தனை  உயிர்கள்  பலியாகபோகிறதோ தெரியவில்லை  காலையில் மருத்துவமனைக்கு நடந்து  வந்தவள் மாலையில் உயிருடன்   இல்லை ,


இந்தஅரசு அமையவோண்டும் என்று அயராது உழைத்த என்னை போன்றவர்களுக்கு மிகுந்த  வேதனையாக இருந்தது  நேற்றைய  மருத்துவர்களுடைய செயல்பாடு. அரசாங்கம் கவனிக்குமா ஏழைமக்களுக்கு இரங்குமா என்றும் கேள்வி எழுப்பி உள்ளார் .

மற்றும் கொரானா வார்டில் செவிலியர்கள் தவிர மருத்துவர்கள் வருவது இல்லை உயிருக்கு போராடும் நோயாளியை காப்பாற்ற மருத்துவர்களிடம் பேசவும் அனுமதிப்பதும் இல்லை  கண்முன்னே என் உறவினர் இறந்ததை சகிக்க முடியவில்லை என்றும் காலை 7 மணிமுதல் உதவிக்கு வராத மருத்துவர்கள் மலை 6 மணிக்கு வந்த பெண் ஊழியர் நாடித்துடிப்பை பார்த்து இறந்துவிட்டார் என்கிறார் .அரசு மருத்துமணை  வைத்தியம் பார்க்க முடியாது என்று கூறியிருந்தால் கூட ஏதாவது அடமானம் வைத்தாவது தனியார் மருத்துவ மனையிலாவது சேர்த்து உயிரை காப்பாற்ற முயற்சி செய்திருப்போம் இது போன்ற கொடுமை எதிரிக்கும் வரக்கூடாது என சோகத்துடன் வேதனையை பகிர்ந்துகொண்டார் .

பி,ஜெயராஜ்.செயலாளர்  தமிழகமாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு  சங்கம்  9789497542

இது தொடர்பாக அரசு மருத்துவமனை ஆர் எம் யிடம் கேட்டபோது இது சம்பந்தமாக எனக்கு ஏதும் தெரியாது என்றும் செய்தி அறிந்த  டீன் இதுபற்றி விசாரணை செய்து வருகிறார் எனவும் கூறினார் .

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...