ஷ்யாம் நியூஸ்
11.05.2021
அரசு நிதி டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்களால் சுரண்ட படுகிறதா ?
கொரானா தோற்று நோயினால் தமிழக மக்கள் அல்லல் பட்டுக்கொண்டிருப்பதை என்னி தமிழக முதல்வர் ஸ்டாலின் வேதனை பட்டுக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அவருக்கும் அவரது ஆட்சிக்கும் சோதனையை உருவாக்கும் நோக்கத்தோடு தோற்று நோய்கள் அதிகமாக பரவாமல் இருக்க சுமார் 5 லட்சம் கோடி கடனில் தமிழக அரசு இருந்தும் மக்களை பாதுகாக்க துணிச்சலாக அரசுக்கு அதிக வருவாய் ஈட்டும் டாஸ்மாக் கடைகளை 10.05.2021 முதல் 24.05.2021வரை மூட உத்தரவிட்டார் தமிழக முதல்வர் ஸ்டாலின் .(முந்தய அரசு உச்சநீதிமன்றத்தில் வருவாய் ஈட்டும் டாஸ்மாக்க்கை மூடமுடியாது என்று கூறியதை நினைவுறுத்துகின்றோம் ) நல்லாட்சி செய்யும் ஸ்டாலின் அரசை கலங்க படுத்தும் நோக்கத்தோடு டாஸ்மாக்கில் பணியாற்றும் மேற்ப்பார்வையாளர்கள் பலர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் துணையோடு கடைசி நாளில் அதிகமாக விற்பனை செய்த தொகையை முழுவதுமாக வங்கியில் செலுத்தாமல் மோசடி செய்ததாக அறியப்படுகிறது .இந்த உண்மையை புலப்படுத்த மீண்டும் விற்பனைக்கு கடைகளை திறக்கும் பொழுது விற்பனை செய்வதற்கு முன்பு ஆய்வு நடவடிக்கை மேற்கொண்டால் உண்மை புலப்படும் .மற்றும் டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் மதுபானங்களை பெட்டி பெட்டியாக கள்ளச்சந்தைக்கு கொடுத்ததின் விளைவால் தற்பொழுது தாராளமாக மது பாட்டிகள் அரசு நிர்ணயித்த விலையை விட பன்மடங்கு உயர்வாக விற்படுகிறது என்று மது விரும்பிகளும் பொதுமக்களும் புலம்புகின்றனர் . 09.05.2021 அன்று டாஸ்மாக் மது விற்பனை பணம் முழுமையாக வங்கியில் செலுத்தியதை உறுதி படுத்தவேண்டும் முதல்வரின் ஆணைப்படி உண்மையான தகவல்களை டாஸ்மாக் மேலாளர்கள்அரசுக்கு தரவேண்டும் என்றும் மேற்பார்வையாளர்களின் முறைகேடுகளுக்கு சில எம் பி ஏ படித்த சில டாஸ்மாக் மேலாளர்கள் உதவி வருவதாகவும் அறியவருகிறது .இதை தமிழக அரசு சீர்செய்யும் என்று நம்புகிறோம் .