ஷ்யாம் நியூஸ்
08.02.2021
தூத்துக்குடி வந்த ஸ்டாலினிடம் எஸ். டி. கே .ராஜனுக்கு எம் எல் ஏ சீட் கேட்ட நாசரேத் திருமண்டல பிஷப் !

தூத்துக்குடி நாசரேத் திருமண்டல பேராயர் தேவசகயம் திமுக தலைவர் திரு மு க ஸ்டாலின் தூத்துக்குடி மாவட்ட 05.08.2021 ம் தேதி பரப்புரையின் போது சந்தித்து மனு கொடுக்க சென்றார் அப்போது தற்போதய திருமண்டல லே செயலாளர் திரு எஸ் டி கே ராஜன் அவர்களுக்கு ஸ்ரீவைகுண்டம் தொகுதி தி மு க வேட்பாளருக்கு சீட் கேட்டுள்ளார் எனவும் ? வரும் சட்டமன்ற தேர்தலில் தி மு க வெற்றி பெற்றுவிடும் என்ற என்னதிலும் எம் எல் ஏ சீட் கேட்டுள்ளதாக தெரிகிறது? ,இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நியமனம் செய்யப்பட்ட 58 ஆசிரியர்களுக்கு சம்பளம் வராத நிலையிலும் வரும் ஆட்சியில் அதை செய்து தரவேண்டும் என கேட்காமலும் நாசரேத் திருமண்டலதிற்கு தேவையான திட்டங்களை உதவிகைளை கேட்காமலும் எஸ் டி கே ராஜனுக்கு எம் எல் ஏ சீட் கேட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் .இது போன்று கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ தி மு க சார்பாக போட்டியிட எஸ். டி. கே. ராஜனுக்கு எம் பி சீட் கேட்டார் என பேசப்பட்டு வந்தது . எஸ் .டி. கே. ராஜன் இரண்டு முறை திருமண்டல லே செயலாளர் ஆக இருப்பவர், திருமண்டல விதிபடி தொடர்ச்சியாக இருமுறை மட்டுமே லே செயலாளர் பதவிவகிக்க முடியும், ஆகவே வரும் தேர்தலில் எம் எல் ஏ சீட் வாங்கி திருமண்டல அரசியலில் இருந்து தமிழக அரசியலில் ஈடுபடலாம் என்று நினைகிறார். ஆனால் இறைவனிடம் கையேந்த வேண்டிய பேராயர் தேவசகயம் அரசியல் புரோக்கராக மாறி முக ஸ்டாலினிடம் ஒரு எம் எல் ஏ சீட்க்காக கையேந்தி நின்றது தூத்துக்குடி மாவட்ட கிறிஸ்தவ மக்களிடையே ஒரு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது?.
