SHYAM NEWS
08..02.2021
தூத்துக்குடியில் தேவேந்திரகுல மள்ளர் தொழில் வர்த்தக சபை முப்பெரும் விழா நடைபெற்றது !
தூத்துக்குடியில் தேவேந்திரகுல மள்ளர் தொழில் வர்த்தக சபை முப்பெரும் விழா முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி காமராஜா தலைமையில் கடந்த சனிக்கிழமை தூத்துக்குடி ராமலட்சுமி கல்யாணம் மண்டபத்தில் நடந்தது.
தூத்துக்குடியில் தேவேந்திரகுல மள்ளர் தொழில் வர்த்தக சபை சார்பில் முப்பெரும் விழா ராமலட்சுமி மஹாலில் நடந்தது. விழாவில் அந்த அமைப்பின் தேசிய தலைவரும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான காமராஜா தலைமை தாங்கி பேசியதாவது "தேவேந்திரகுல மள்ளர் சமுதாய மக்கள் தற்போது கல்வியில் ஒரு நிலையான இடத்தினை அடைந்தும். சரியான வேலைவாய்ப்பின்றி இருக்கிறார்கள். வேலையின்மை இளைஞர் மத்தியில் தவறான போக்கை ஏற்படுததும். அவர்களை பொருளாதார வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்காக இந்த கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
விழாவில், தேவேந்திர குல வேளார் சமுதாயத்தைச் சார்ந்த ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தென் மண்டல செயலாளர் அரவிந்த ராஜா முன்னிலை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் கன்னுசாமி, துனைத் தலைவர் அலெக்ஸாண்டர், மாநகர செயலாளர் சாமி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சீனிவாசன் வரவேற்புரை ஆற்றினார். சம்பத்குமார் விழா தொகுப்புரை வழங்கினார். கூட்டத்தில் நிர்வாகிகள் பரதன், காந்தி, பப்புசாமி, புகழேந்தி, செல்வன், துரைசாமி, உட்பட திரளானோர் கொண்டனர்.