திமுக ஆர் எஸ் பாரதிக்கு கொலை மிரட்டல் விடுத்த அதிமுக வைகை செல்வன் மீது தூத்துக்குடி திமுக வழக்கறிஞர் அணி புகார்!
ஷ்யாம் நியூஸ்
13.02.2020
திமுக ஆர் எஸ் பாரதிக்கு கொலை மிரட்டல் விடுத்த அதிமுக வைகை செல்வன் மீது தூத்துக்குடி திமுக வழக்கறிஞர் அணி புகார்!
திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி 07.02.2021 அன்று அம்பத்தூரில் நடை பெற்ற பொதுக்கூட்டத்தில் ஆளுங்கட்சினர் மீது லஞ்ச ஒழிப்பு துறையில் கொடுக்கப்பட்ட ஊழல் புகார் குறித்தும் அதன் மீது சென்னை உயர்நீதிமன்றம் சி. பி. ஐ விசாரணைக்கு உத்தரவிட்டது பற்றியும் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு பற்றியும் பேசியிருந்தார். அதற்க்கு பதில்அளிக்கும் விதமாக ஆர் எஸ் பாரதி மீது அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் கைசெல்வன் ஆர் எஸ் பாரதி கொரானாவை காரணம் காட்டி வழக்கில் ஆஜராகாமல் விலக்கு வாங்கி ஓடி ஓளிகிறார் என்றும் ஆர் எஸ் பாரதி நாக்கை அறுக்க கட்சியில் துடிக்கிறனர் என்று கூறியிருந்தார். இதனை கண்டித்து தூத்துக்குடி திமுக வழக்கறிஞர் அணியினர் வழக்கறிஞர் மோகன் தாஸ் சாமுவேல் எம். ஏ. பி. எல் தலமையில் தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மணு அளித்தனர்.
அந்த மனுவில் அதிமுக செய்தி தொடர்பாளர் வைகை செல்வன் உண்மைக்கு புறம்பாக அனைத்து செய்திகளையும் எங்களுடைய கழக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி மீது தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக பொதுவெளியில் தரக்குறைவாக அருவருக்கத்தக்க பேச்சுகள் மூலம் அதிமுக கட்சியினரை அறிக்கை மூலம் வன்முறையில் ஈடுபட தூண்டிவிட்டு வருகிறார். மேலும் கொரனா காலத்தில் எங்கள் அமைப்பு செயலாளர் மீது போடப்பட்ட வழக்கிற்காக நீதி மன்றத்தின் உத்தரவு பெற்று இருந்ததையும் தனிப்பட்ட முறையில் திரித்து கூறியும் நீதிமன்ற உத்தரவையும் களங்கப்படுத்தும் நோக்கத்தோடு தொடர்ந்து பேசி வருகிறார்.
சட்டதிற்க்கு புறம்பான செயலில் ஈடுபட்டு கொலை மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல் அவதூறு பரப்புதல் பொதுமக்களிடையே வன்முறையை தூண்டிவிட்டு சட்ட ஒழங்கை சீர்குலைத்தல் நீதிமன்ற உத்தரவுகளை தனிப்பட்ட ஆதாயத்திற்காக திரித்து கூறி சட்டதிற்க்கு புறம்பாக செயல்பட்டு வரும் அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் வைகை செல்வன் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்துதது.