ஷ்யாம் நியூஸ்
08.02.2021
தூத்துக்குடியில் புதிய டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு.
தூத்துக்குடியில் இன்று நடந்த மக்கள் குறை தீர்ப்பு நிகழ்ச்சியில் நடுவக்குறிச்சி சாயர்புரத்தை சார்ந்த ஜோயல் என்பவர் புதிதாக திறக்க உள்ள டாஸ்மாக் கடையை திறப்பதை தடுத்து நிற்த்த வேண்டும் என ஆட்சியர் செந்தில் ராஜ்யிடம் மணு அளித்தார் அந்த மணுவில்.
தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி தாலுகா, சுப்பிரமணியபுரம் முதல் சாயர்புரம் செல்லும் பிரதான சாலையில் டாஸ்மாக் மதுபான கடை துவங்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பகுதியில் இ.இ.444 சாயர்புரம் தொடக்க வேளாண்மை கடன் சங்கம் சாயர்புரம் 628251 என்ற கூட்டுறவு வங்கிக்கு நேர்எதிரே டாஸ்மாக் மதுபான கடை அமைப்பதற்காக அவசர அவசரமாக கடை கட்டப்பட்டுள்ளது.
இப்பகுதியை சுற்றிலும் சுமார் 50 அடி தூரத்தில் தூய ரபாயேல் மனவளர்ச்சி குன்றியோருக்கான பள்ளி, தூயரபாயேல் மருத்துவமனை, ஜி.யு.போய் மகளிர் கல்லூரி, நாசரேத் திருமணடத்தினுடைய கிறிஸ்தவ ஆலயம், சாயர் நினைவு ஆதரவற்ற முதியோர் இல்லம், தூய மேரி மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் தூய மார்ட்டீன் தொடக்கப்பள்ளி ஆகியவை அமைந்துள்ளது.
டாஸ்மாக் கடை அமைப்பதற்கு கட்டப்பட்டுள்ள கட்டிடத்திற்கு அடுத்த பிளாட்டில் சுமார் 10 அடி தூரத்தில் பள்ளி மாணவ-மாணவியர்கள் விளையாடும் போப் கல்லூரி மற்றும் உயர்நிலைப்பள்ளிக்கு சொந்தமான விளையாட்டு மைதானம் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.
டாஸ்மாக் மதுபான கடை அமைப்பதற்கான அரசு நிர்ணயித்துள்ள சட்டவிதிகளை மீறும் வகையில், டாஸ்மாக் கடை அமைப்பதற்காக கட்டப்பட்டு வரும் இந்த கட்டிடத்தின் அருகில் மகளிர் கல்லூரி, உயர்நிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளி, பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு மைதானம், மனவளர்ச்சி குன்றியோருக்கான பள்ளி, ஆதரவற்றோர்களுக்கான முதியோர் இல்லம், மருத்துவமனை மற்றும் கூட்டுறவு வங்கி என குழந்தைகள், பெண்கள், முதியோர்கள், மாணவ-மாணவியர்கள் பலர் வந்து செல்லும் இடத்தில் அவசர அவசரமாக மதுபான கடை அமைப்பதற்கு கட்டிடம் கட்டி திறப்பு விழா நடத்துவதற்கு ஆயத்தப்பணி நடைபெறுவதாக அறிகிறோம்.
அதே பகுதியில் சுமார் 1 கி.மீ தூரத்தில் காமராஜர் நகர் பகுதியில் அரசு மதுபானகடை அரசு சட்டதிட்ட விதிமுறைகளுக்குட்பட்டு நடந்து வருகிறது. அருகில் டாஸ்மாக் கடை இருந்து வரும் சூழ்நிலையில் அப்பகுதியில் மேலும் ஒரு புதிய டாஸ்மாக் கடை அமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது என தெரிவித்துள்ளார்.
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்