ஷ்யாம் நியூஸ்
16.02.2021
தூத்துக்குடி அண்ணாப்பல்கலைக் கழக பொறியியல் கல்லூரி மாணவர்கள் முருகப்பாண்டி மற்றும் ஹரிகரனுக்கு சமூக சேவைக்காண பாராட்டு சான்றிதழ்களை தூத்துக்குடி கலெக்டர் டாக்டர் செந்தில்ராஜ் வழங்கினார் .
இவர்கள் இருவரும் தூத்துக்குடி வ .உ .சி .அண்ணா பொறியியல்கல்லூரியில் இயந்திரவியல் இறுதி ஆண்டு மாணவர்கள் ஆவார்கள் .இந்த மாணவர்களுக்கு விஞ்ஞானி தூத்துக்குடி முருகன் இலவசமாக பயிற்சி அளித்து அவர்கள் சமூக சேவையில் ஈடுபடவேண்டும் என கூறி அவரும் சேர்ந்து தூத்துக்குடி மாநகரில் ஏராளமான மரக்கன்றுகளை நட்டி பராமரித்து வந்தனர் .மேலும் பொறியியல் கல்லூரி மாணவர்கள் இயந்திரங்களை பழுது நீக்கியும் ,புதிய பொருட்களை உருவாக்குவது பற்றியும் ,புதிய தொழிற்நுட்பங்களை உருவாக்குவது தொடர்பாகவும் பொறியியல் மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சியளித்த பயிற்சியில் இம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர் .
விஞ்ஞானி முருகன் வாழைபட்டு நூல் தொழில் நுட்பத்தின் மூலம் புகழ் பெற்றவர் என்பது குறிப்பிட தக்கது .