ஷ்யாம் நீயூஸ்
19.02.2021
மோடிக்கு அதானி அம்பானி எனும் இரண்டு பிள்ளைகள் தூத்துக்குடி கம்யூனிஸ்ட் கட்சி அர்ஜுனன் கடும் தாக்கு?
தூத்துக்குடியில் டீசல் பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது நாட்டில் டீசல் பெட்ரோல் விலை மிகக் கடுமையாக உயர்ந்து வருகிறது ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாய் டீசல் 90 ரூபாய் என்ற அளவில் உயர்ந்து வருகிறது இது மக்களின் தலையில் பெரும் பெரும் இடியாக இறங்கியுள்ளது இதைப் பற்றி மத்திய அரசை ஆளும் மோடி அமித்ஷா கவலைப்படுவதில்லை மற்றும் சிலிண்டர் விலை 50 ரூபாய் வீதமாக தொடர்ந்து ஏறிக்கொண்டே போகிறது இது சாமானிய ஏழை எளிய மக்களின் வயிற்றில் அடிக்கும் செயலாகும் ஆண்டுக்கு ஐந்து லட்ச்திற்க்கு வங்கியில் வரவு இருந்தால் மானியம் ரத்து என்று நடுதரமக்களை நடுத்தெருவில் விட்டுவிட்டார் மோடி. குஜராத் வளர்ச்சி அடைந்துள்ளது என்று பொய்யான பிம்பத்தை காட்டி ஆட்சியை பிடித்தார் மோடி!
பிரதமர் மோடி நாட்டு மக்களுக்காக செயல்படாமல் அவரவர்கள் இரண்டு பிள்ளைகளான அதானி அம்பானி அவர்களின் வளர்ச்சியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிறார் நாடு நல்ல உயர்ந்துவிட்டது எனக்கூறும் மோடி பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தியதை கூறியிருக்கிறார் என்பது இப்போது தெரிகிறது. இப்படிப்பட்ட பிஜேபி அரசுடன் கூட்டணி வைத்துக்கொண்டு தமிழகத்தை ஆளும் இபிஎஸ் ஓபிஎஸ் இருவரும் தமிழக நலன்களை மோடியிடம் அடமானம் வைத்து விட்டு பெட்ரோல் டீசல் மற்றும் கேஷ் விலை உயர்வை பற்றி பேசாமல் அவர்களோடு கூட்டணி வைத்துக்கொண்டு தமிழகத்தில் வாக்கு கேட்டுக் கொண்டிருக்கிறார் இதை பொதுமக்கள் வரும் சட்டமன்றதேர்தல் மூலம்
தக்கபாடம் புகட்டவேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்களுக்காக எப்போதும் குரல் கொடுக்கும் என்றும் பேசினார்
இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரசல், ஒன்றிய செயலாளர் சங்கரன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் குமாரவேல், சீனிவாசன், வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் எம்.எஸ்.முத்து, சாலை போக்குவரத்து சங்கம் வையணப் பெருமாள், போக்குவரத்து சங்கம் வின்சென்ட், மானகர்குகு உறுப்பினர் ஆறுமுகம்,மற்றும் பலர் கலந்துகொண்டனர்.