ஷ்யாம் நியூஸ் 24.09.2019 தூத்துக்குடியில் மாணவனுக்கு பாலியல் தொல்லை : ஆசிரியர் கைது தூத்துக்குடியில் பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி பீச் ரோட்டில் இயங்கி வரும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் திருச்செந்தூர் அருகே உள்ள காயாமொழி கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி மகன் திருமணி (25) என்பவர் தற்காலிக ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். மேலும் அவர் பள்ளி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கியுள்ளார். இரவு நேரங்களில் விடுதியில் தங்கியுள்ள ஒரு மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட அந்த மாணவர் சைல்டு லைனுக்கு தொலைபேசி மூலம் தகவல் அளித்துள்ளார். இதையடுத்து சைல்டு லைன் அதிகாரிகள் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். இதில் ஆசிரியர் திருமணி, மாணவர்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிந்து ஆசிரியர் திருமணியை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் ப...