SHYAM NEWS 30.04.2019 யாருக்கு வாக்களித்தனர்?.. வித்தியாசமான முறையில் வாக்காளர்களை வேவு பார்த்த திரிணமூல் காங்கிரஸ்! கொல்கத்தா: வாக்குப் பதிவு இயந்திரத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் சின்னம் இருக்கும் பட்டன் மீது வாசனை திரவியத்தை தெளித்து வாக்காளர்கள் தங்களுக்குத்தான் வாக்களித்தனரா என்பதை அவர்களது விரல்களை நுகர்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லோக்சபா தேர்தலுக்கான நான்காம் கட்ட வாக்குப் பதிவு நாடு முழுவதும் 9 மாநிலங்களில் நேற்று நடைபெற்றது. அது போல் மேற்கு வங்கத்தில் உள்ள சில தொகுதிகளுக்கும் நேற்று வாக்குப் பதிவு நடைபெற்றது. மாநில பத்திரிகை வாக்காளர்கள் தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்கின்றனரா என்பதை தெரிந்து கொள்ள திரிணமூல் காங்கிரஸ் கட்சி புதிய யுத்தியை கையாண்டுள்ளது குறித்து அம்மாநில பத்திரிகை அனந்தபசார் செய்தி வெளியிட்டுள்ளது. விரலில் வாசனை அந்த பத்திரிகையில் உள்ள செய்தி கூறுகையில், வாக்கு இயந்திரத்திலுள்ள திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் சின்னத்தில் வாசனைத் திரவியத்தை கட்சியினர் தெளித்து வைத்திருந்தனர். வாக்களித்துவிட்டு வெளியே வரும...