“ தம்பி ஆர்பிஐ, காசு கொடு, தேர்தல் வருது” ரிசர்வ் வங்கியை நச்சரிக்கும் மத்திய அரசு..? முன்னாள் ஆர்பிஐ ஆளுநர் உர்ஜித் படேலின் ராஜினாமாவுக்கு இந்த காசு கேட்டு தொந்தரவு செய்ததும் ஒரு காரணம் என கிட்ட தட்ட உறுதி ஆகிவிட்டது. யார் என்ன சொன்னாலும் சரி, யார் எப்படி ராஜினாமா செய்து கொண்டாலும் சரி எனக்கு காசு வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறது மத்திய அரசு. ஆனால் புதிய ஆர்பிஐ ஆளுநர் சக்தி காந்த தாஸோ மத்திய அரசுக்கு ஈவுத் தொகை தருவது தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என பசப்பலாகச் சொல்கிறார். நிதிப் பற்றாக்குறை மத்திய அரசுக்கு வர வேண்டிய வரி வாய் எதிர் பார்த்த அளவுக்கு வரவில்லை. குறிப்பாக சரக்கு மற்றும் சேவை வரியில் மட்டும் சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் குறைவு. இந்த லட்சனத்தில் தான் ஏகப்பட்ட பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விகிதத்தை மாற்றி அமைத்தது குறைத்தது எல்லாம். அதே போல் மத்திய அரசின் கைவசம் இருக்கும் சொத்துக்களை எதிர் பார்த்த விலைக்கு விற்க முடி...