தூத்துக்குடி காலான்கரை கிராமத்தில் சிப்காட் தீயணைப்பு துறையினரின் வெள்ளதடுப்பு மற்றும் கொரானா விழிப்புணர்வு !
ஷ்யாம் நியூஸ்
19.10.2020
தூத்துக்குடி காலான்கரை கிராமத்தில் சிப்காட் தீயணைப்பு துறையினரின் வெள்ளதடுப்பு மற்றும் கொரானா விழிப்புணர்வு !
தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளம்1க்கு உட்ட பின் தங்கிய கிராமம் காலான்கரை கிராமம் . தற்போதுள்ள வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியம் அதிகாரிகள் பஞ்சாயத்து தலைவர் முயற்சியால் உடற்பயிற்சி விளையாட்டு மைதானம் பள்ளி வளாக சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.அந்த வகையில்
வடகிழக்கு பருவமழை ஆரம்பம் ஆகும் சுழலில் மழைகாலத்தில் ஏற்படும் வெள்ள அபாயம் குறித்தும் அவற்றில் இருந்து பொதுமக்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்து கொள்ளவது என்ற விழிப்புணரவு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்பது வெள்ளத்தில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்பது என்றும் மற்றும் மழைகாலங்களில் உணவு பொருட்கள் மற்றும் தங்கநகைகளை தண்ணீர் புகாத பைகளில் பாதுகாப்பாக வைத்து எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது போன்ற செயல் முறை விளக்கங்களை தூத்துக்குடி சிப்காட் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் பெ.முனியசாமி தலைமையில் பொதுமக்கள் முன்னிலையில் செய்து காட்டினர்.தற்போது உலகை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரானா நோயிலிருந்து பொதுமக்கள் தங்களையும் தங்கள் குடும்பத்தையும் பாதுகாத்து கொள்ள முககவசம் அணியவேண்டும் என்று விழிப்புணர்வும், பிரச்சாரமும் செய்தனர்.மேலும் நிலைய அலுவலர் முனியசாமி கூறுகையில் பொதுமக்களுக்கு ஏற்படும் எந்த அபாயத்தில் இருந்தும் மீட்கும் வகையில் சிப்காட் தீ அணைப்பு படை தாயார் நிலையில் உள்ளது தேவையான உபகரணங்கள் உள்ளன என்றும் பொதுமக்கள் 101,108 மற்றும் 2340091 போன்ற தொலைபேசிகளில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்றும் தெரிவித்தார்.இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை கோரம்பள்ளம்1 கிராமம் கிராம நிர்வாக அலுவலர் ராஜலெட்சுமி ஏற்பாடு செய்திருந்தார்.கோரம்பள்ளம் பஞ்சாயத்து தலைவர் செல்வபிரபா அதிசயராஜ் தலமைதாங்கினார்.தாசில்தார் பூபதி,துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன், வருவாய்த்துறை அதிகாரி ராதிகா காலான்கரை வார்டு உறுப்பினர் ஞானகண் ஆகியோர் கலந்து கொண்டனர்.கோரம்பள்ளம் பஞ்சாயத்து செயலர் கொ.பரமசிவன் நன்றி தெரித்தார்.