ஷ்யாம் நியூஸ்
16.10.2020
தூத்துக்குடி 3ம் மைல் மேம்பாலம் சாலை வெடிப்பு!விபத்து ஏற்படும் அபாயம்!
தூத்துக்குடி மாவட்டம் திருநெல்வேலி பிரதான தேசிய நெடுஞ்சாலையான 3ம்மைல் மேம்பாலத்தில் 20நாட்களுக்கு முன்னால் போடப்பட்ட தார்சாலை ரோட்டின் மத்தியில் இரண்டாக பிளந்தது உள்ளது.தூத்துக்குடி நகருக்குள் வரும் இரண்டு சக்கரவாகன ஓட்டுநர்களுக்கு பெரும் விபத்தை ஏற்படுத்தும் விதத்தில் உள்ளது.மற்றும் ரோட்டின் இருபுறமும் பெரும் பள்ளங்கள் உள்ளது.
இந்த ரோடு கடந்த ஆகஸ்ட் மாதம் 25 தேதியை ஒட்டிய நாட்களில் தான் போடப்பட்டது.
இந்த ரோட்டில் தான் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் அரசு அதிகாரிகள் தினமும் ஒருங்கிணைந்த மாவட்ட அலுவலகங்களுக்கு சென்று வருகின்றனர் ஆனால் ஏனோ எந்த அதிகாரிகள் கண்களுக்கு மட்டும் இந்த ஆபத்தான குழிகள் தெரியாமல் போனதோ?
தூத்துக்குடி நெடுஞ்சாலை துறை போடும் ரோடுகள் மற்றும் கட்டும் கட்டிடங்கள் உறுதியாக இருப்பது இல்லை?ஆனால் ஒப்பந்தத்தின் விலை மட்டும் ராக்கெட் வேகத்தில் உயர்கிறது.எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்று பேசப்படும் வேலையில் உண்மைதான் என நிருபிக்கும் விதமாக இந்த சாலையின் வேலை உள்ளது.விபத்து ஏற்பட்டு உயிர் பலி வாங்குவதற்க்கு முன் மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக்கொண்டனர்.