ஆடுமேய்க்கும் தொழிலாளியை காலில் விழ வைத்த சம்பவம் குறித்து தூத்துக்குடி எஸ்.பி. ஜெயக்குமார் விளக்கம்!
Shyam News
13.10.2020
தூத்துக்குடியில் ஆடுமேய்க்கும் தொழிலாளியை காலில் விழ வைத்த சம்பவம் !எஸ்.பி. ஜெயக்குமார் விளக்கம்!
கடந்த 11ஆம் தேதி பால்ராஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இது சம்பந்தப்பட்ட 7 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில் ஆடு மேய்ப்பவர்களிடையே ஏற்பட்ட தகராறில் அவர்கள் இவ்வாறு செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் இது குறித்து தூத்துக்குடி எஸ்.பி. ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்த போது, “இது ஒரு அநாகரீகமான, சட்டத்திற்கு புறம்பான செயல். தற்போது சிவசங்கு மீது 8 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த செயலில் ஈடுபட்டவர்கள், வீடியோ எடுத்து வெளியிட்டவர்கள் என இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதில் சம்பந்தப்பட்டவர்கள் குறித்து விசாரித்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.