தூத்துக்குடியில் கன்ஷிராம் நினைவுநாள் அனுசரிப்பு !தேசிய பகுஜன் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் பிரோமோத்கோரில் தமிழக சுற்று பயணம் !
ஷ்யாம் நியூஸ்
09.10.2020
தூத்துக்குடியில் கன்ஷிராம் நினைவுநாள் அனுசரிப்பு !தேசிய பகுஜன் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் பிரோமோத்குறில் தமிழக சுற்று பயணம் !
தூத்துக்குடியில் பகுஜன் சமாஜ் கட்சி நிறுவனர் கன்ஷிராம் நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது .முன்னாள் எம் பி யும் தேசிய பகுஜன் சமாஜ் கூட்டணி தலைவருமான பிரோமோத்குறில் தூத்துக்குடியில் நடந்த கன்ஷிராம் நினைவுநாள் கூட்டத்தில் கலந்துகொண்டார் மற்றும் வரும் 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் சமரசம் இல்லா பார்ப்பனியம் எதிர்ப்பாளர்களை ஒரு அணியில் திரட்டி தி மு க ,காங்கிரஸ் கூட்டணி ,அ தி மு க ,பா ஜா க கூட்டணி அல்லாத ஒரு கூட்டணி உருவாக்கப்படும் என்றும் இது தேசிய அளவில் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து வெளியேறி சிறு சிறு அமைப்புகளாக இயங்கிவருபவர்களை ஒருங்கிணைத்து செயல்படும் என்றும் .உத்திரபிரதேசத்தில் தலித் பெண்கள் கற்பழிக்கப்படுவதும் கொலை செய்யப்படுவதும் புதிது அல்ல தினமும் 15 முதல் 20 பெண்கள் பாலியல் கொடுமைகள் செய்யப்படுகிறார்கள் அவர்கள் பற்றிய செய்திகள் வெளிவருவது இல்லை மத்தியில் ஆளும் பி ஜே பி அரசு தோல்விகளை மறைப்பதற்கு திட்டம்மிட்டு இதுபோன்ற செய்திகள் பேசவைக்கபடுகிறது .பகுஜன் சமாஜ் கட்சி நிறுவனர் கன்ஷிராம் கொலைசெய்யப்பட்டபோதே சரியான நடவடிக்கை எடுத்திருந்தால் இதுபோன்ற செயல்கள் நடைபெற்று இருக்காது .கொரானா நாட்களில் உலகம் முழுவதும் ஊரடங்கு நடைமுறை இருந்தது ஆனால் எந்த நாட்டிலும் கொரானா காலத்தில் அரசு நிறுவனங்களை தனியாருக்கு விற்கப்படவில்லை ஆனால் மோடி அரசு கொரானா லோக்டவுனை பயன்படுத்தி அம்பானி அதானி போன்ற தனியார் முதலாளிகளுக்கு விற்பனை செய்து விட்டனர் இதனால் நாட்டில் உள்ள இளஞ்சர்கள் வேலையை இழந்து ரோட்டுக்கு வந்து போராடும் நிலை ஏற்பட்டு உள்ளது மற்றும் விவசாய மசோதா பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பு என்று பிஜேபி அரசின் முழு தோல்விகளையும் மறைப்பதற்க்காக அம்பானி அதானி போன்றவர்களின் மூலம் செய்தி நிறுவனங்களை விலைக்கு வங்கியும் நிதிபதிகளை விலைக்கு வங்கியும் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்து வருகின்றனர் .அம்பேத்கார் எழுதிய அனைவருக்குமான சமம் சட்டத்தை பயன்படுத்தாமல் மனு ஸ்ருதி சட்டத்தை செயல்படுத்துவதில் ஆர் எஸ் எஸ் மற்றும் சங் பரிவார் அமைப்பினர் குறியாக உள்ளனர். மேலும் கூறுகையில் தமிழகத்தில் உள்ள தலித் தலைவர்களான திருமாவளவன் ,கிருஷ்ணசாமி போன்றோர் திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைத்து கொண்டு ஒரு சீட்டு பிச்சைக்காரர்கள் போல் செயல்படுகின்றனர் என்றும் பத்திரிகையாளர் சிறப்பு சந்திப்பில் தெரிவித்தார் உடன் தேசிய பகுஜன் கூட்டணி மாநில இணை ஒருங்கிணைப்பாளர் பகுஜன் லூயிஸ் உடன் இருந்தார் .