ஷ்யாம் நியூஸ்
28.10.2020
ஷ்யாம் நியூஸ் எதிரோலி 3ம் மைல் பழுதான மேம்பாலம் ரோடு பணி தொடங்கியது?
தூத்துக்குடி திருநெல்வேலி செல்லும் 3ம் மைல் மேம்பாலத்தின் பிரதான சாலையில்
வெடிப்பு ஏற்பட்டு இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு பெரும் இடையூறு ஏற்றப்பட்டது இதனால் அப்பகுதில் அடிக்கடி சிறு விபத்துகள் ஏற்பட்டு வந்தன.இதுகுறித்து நமது ஷ்யாம் நியூஸ் செய்தியில் கடந்த 16ம் தேதி செய்தி வெளியிட்டிருந்தோம் ஷ்யாம் நியூஸ் செய்தியை கண்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சாலை சீரமைக்க வேண்டி பள்ளமான சாலையில் மலர்வளையம் வைத்து மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தனர். இதனை அறிந்த தூத்துக்குடி நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இன்று பழுதடைந்து அந்த தார்சாலையை சீரமைக்கும் பணியை ஆரம்பித்துள்ளனர்.இது குறித்து கேட்டபோது இன்று இரவுக்குள் சாலை சீரமைக்கபட்டு நாளை காலையில் இருந்து வாகனங்கள் பாதுகாப்புடன் செல்ல வழிவகை செய்யப்படும் என்று நெடுஞ்சாலை உதவி பொறியாளர் தெரிவித்தார்.