ஷ்யாம் நியூஸ்
15.10.2020
தூத்துக்குடியில் காணாமல் போன 102 செல்போன்களை கண்டு பிடித்து உரிமையாளரிடம் ஒப்படைத்தார் எஸ் பி ஜெயக்குமார்.!
தூத்துக்குடியில் காணாமல் போன 102 செல்போன்களை கண்டு பிடித்து உரிமையாளரிடம் ஒப்படைத்தார் எஸ் பி ஜெயக்குமார்.மீட்ட தனி படையினருக்கு எஸ் பி பாராட்டு தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்ட எஸ் பி ஜெயக்குமார் பொறுப்பேற்றதில் இருந்து பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்துவருகிறார் எப்போதும் இல்லாத அளவிற்கு பொதுமக்கள் மத்தியில் காவல்துறையினர் மீது நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது .சமீபத்தில் காவல் நிலையங்களில் தரும் புகார்களை சம்பந்த பட்ட இடத்துக்கே சென்று காவலர்கள் விசாரணை செய்யவேண்டும் காவல்நிலத்திற்கு வந்துதான் ஆகவேண்டும் என்று கட்டாயப்படுத்தக்கூடாது ஏற்ற அறிக்கை பொதுமக்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது .மற்றும் அதனை தொடர்ந்து
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் செல்போன் காணாமல் போனதாக உள்ள புகார்களின் பேரில் துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு 102 செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளன. செல்போன்களை மீட்ட தனிப்படையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் ஜெயக்குமார் பாராட்டு தெரிவித்தார் .
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் 2019 முதல் இதுவரை காவல் நிலையங்களில் செல்போன் காணாமல் போனதாக பெறப்பட்ட மனுக்கள் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையில் உதவி ஆய்வளார் சுதாகரன்,பெர்லின் பிரகாஷ், காவலர்கள் சாபு, சதீஷ்குமார், எடிசன் மற்றும் புவனேஷ் ஆகியோர் அடங்கிய தனிப்படையும்,
மற்றும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் . பெட்ரிக் ராஜன், நாலாட்டின் புதூர் காவல் நிலைய தலைமைக் காவலர் . மணிகண்டன், தட்டார்மடம் காவல் நிலைய முதல் நிலைக் காவலர்கள் . மணிகண்டன், செய்துங்கநல்லூர் காவல் நிலைய முதல் நிலைக் காவலர் . காசி மற்றும் ஆயுதப்படை காவலர் . ரகு ஆகியோர் அடங்கிய மற்றொரு தனிப்படையும் அமைத்து விரைந்து நடவடிக்கை எடுத்து செல்போன்களை மீட்க உத்தரவிட்டார்.
மேற்படி உத்தரவின்பேரில் 2 தனிப்படைகளும் இணைந்து துரிதமாக செயல்பட்டு ரூபாய் 10 லட்சம் மதிப்புள்ள 102 செல்போன்களை அதன் ஐ.எம்.இ.ஐ (IMEI) எண்ணை வைத்து கண்டு பிடித்து, அவைகளை பறிமுதல் செய்துள்ளனர்.
மேற்படி கண்டுபிடிக்கப்பட்ட செல்போன்களை, அதன் உரிமையாளர்களிடம் இன்று (15.10.2020) மாவட்ட காவல்; அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் ஒப்படைத்தார்.
பின் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில் செல்போன்களை பலர் பல்வேறு வழிகளில் தொலைத்திருக்கலாம். வங்கி விபரங்கள் போன்ற உங்களுடைய தனிப்பட்ட விபரங்களையும், புகைப்படங்களையும் செல்போனில் வைக்காதீர்கள். கவனமில்லாமல் உங்கள் செல்போன் தொலைத்து விட்டால், அது ஒரு வேளை சமூக விரோதிகள் கையில் கிடைத்து விட்டால் அதை அவர்கள் பல்வேறு சட்ட விரோதமான காரியங்களுக்கு பயன்படுத்தக்கூடும் என்றும்,*
இரு சக்கர வாகன விபத்தில் ஏற்படும் உயிரிழப்புகளில் 40 சதவீதம் ஹெல்மெட் அணியாமல் தலையில் அடிபட்டு இறந்தவர்கள்தான் அதிகம். ஆகவே இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது ஹெல்மெட் அணிய வேண்டும், நான்கு சக்கர வாகனத்தில் செல்லும்போது சீட் பெல்ட் அணியவேண்டும். சாலை விதிகளை மதித்து நடந்து விபத்துக்களை தவிர்க்க வேண்டும் என்றும்,
*தற்போது தளர்வுகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக்கொண்டு வருகிறது. ஆகவே அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மேலும் அடிக்கடி சோப்பு மற்றும் கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்யவேண்டும் என்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . எஸ். ஜெயக்குமார் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
*இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி காவல்துறை தலைமையிட கூடுதல் கண்காணிப்பாளர். செல்வன், தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் . கணேஷ் உட்பட காவல்துறை அதிகாரிகள், காவல் ஆளினர்கள் மற்றும் செல்போன் உரிமையாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.