SHYAM NEWS
03.03.2025
சீமான் ஒரு விபச்சாரன் தி. க அதிரடி பதில் !
பெண் விபச்சாரி என்றால் ஆணுக்கு பெயர் "விபச்சாரன்".. சொன்னதும் பெரியார்தான்.. சீமானுக்கு திக பதிலடி!
இது தொடர்பாக திராவிடர் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் மதிவதனி கூறியிருப்பதாவது: ஆணாதிக்க சமூகத்தில், எந்த வார்த்தை சொன்னால் பெண்களே சக பெண்ணை இழிவாக நினைப்பார்கள் என்பதை தெரிந்துக் கொண்டும், தான் செய்த கேவலமான குற்றத்திற்கு தண்டனை உறுதி என்று தெரிந்து பயத்தின் உச்சத்தில் கதறி துடிக்கும் விபச்சாரன் சீமான்.
அய்யோ எங்க அண்ணனை விபச்சாரன் என்று எப்படி சொல்லலாம் என்று அலறிக்கொண்டு எங்களை திட்ட கெட்ட வார்த்தை தேடாதீர்கள். 'சீமான்' என்ற சொல்லே நிகழ்கால அரசியல் சூழலில் மாபெரும் கெட்ட வார்த்தைதான்! தந்தை பெரியார் பேசாத பல கருத்துகளை அவர் பேசியதாக சொல்லிக் கொண்டு திரியும் கூட்டமே, அதில் உண்மையாக அவர் சொன்ன ஒன்றையும் சேர்த்துக் கொள்ளுங்கள். பெண் விபச்சாரி என்றால் அந்த ஆணுக்கு பெயர் "விபச்சாரன்" தானே என்றார்.
விரும்பிய பெண்ணை கிஞ்சித்தும் அறமின்றி பேசும் 'விபச்சாரன் சீமான்'. பொது வெளியில் இதுபோன்ற கேடுகெட்ட, பெண்களுக்கு எதிரான பேச்சை பேசும் யாராய் இருப்பினும் அவர்கள் மனிதர்கள் இல்லை என்று அறிக! இவ்வாறு மதிவதனி தெரிவித்துள்ளார்.